அப்துல் ராசிக் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் - தவ்ஹீத் ஜமாஅத்

தவ்ஹீத் ஜமாத் செயலாளர் அப்துர் ராசிக் அவர்களுக்கு எதிரான வழக்கில் அமைச்சர் ரிஷாத் தரப்பிலிருந்து 10க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு தவ்ஹீத் ஜமாத் செயலாளருக்கு எதிராக வாதிட்டதாக பரப்பப்படும் செய்தியில் எதுவித உண்மைத்தண்மையும் இல்லை என ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் துணை செயலாளர் ரஸ்மின் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த அப்துல் ராசிக் அவர்களின் வழக்கில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களின் தரப்பில் 15 சட்டத்தரணிகள் ஆஜரானதாக பரப்பப்படும் செய்தி தொடர்பில் நாம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர் ...

செயலாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட 16.11.2016 அன்று நடைபெற்ற வழக்கு விசாரனையில் சமுதாயத்தை காட்டிக் கொடுத்து தன் சுய நல அரசியலை முன்னெடுக்க நினைக்கும் அஸாத் சாலி தரப்பால் சட்டத்தரணி ஷஹீட் என்பவர் ஆஜரானார். 

இதே நேரம் 29.11.2016 அன்று நடைபெற்ற தவ்ஹீத் ஜமாத் செயலாளருக்கு எதிரான வழக்கில் எதிர் தரப்பிலிருந்து எந்தவொரு முஸ்லிம் வழக்கறிஞரும் இம்முறை ஆஜராக வில்லை. 

முஸ்லிம்களும் இவர்களை எதிர்க்கிறார்கள் என்று கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் நீதி மன்றத்தில் கூறிய போது, முஸ்லிம்கள் தரப்பால் யாராவது ஆஜராகியிருந்தால் வாதிடலாம் அவரின் வாதத்திற்க்கும் நாங்கள் பதிலளிக்க தயாராக இருக்கிறோம் என தவ்ஹீத் ஜமாத் தரப்பு சட்டத்தரணிகள் குழுவை பிரதிநிதித்துவப் படுத்திய சிரேஷ்ட சட்டத்தரணி மைத்திரி குணரத்ன மன்றில் தெரிவித்தார். 

அதன் பின்னும் முஸ்லிம் சட்டத்தரணிகள் யாரும் பேசவில்லை, அங்கு சமூகமளித்திருக்கவுமில்லை

இனவாதத்தை தூண்டும் பொது பல சேனாவின் செயலாளருக்கு எதிராக தவ்ஹீத் ஜமாத் செயலாளர் பேசியதை புத்த மதத்தை இழிவு படித்துப் பேசியதாக  சித்தரித்து குறித்த வழக்கு  பதியப்பட்டுள்ளது. 

இந்த வழக்கை சட்ட ரீதியாக நாம் எதிர்கொண்டு வருகிறோம். ஆகவே தயவு செய்து இந்த வழக்கு விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிட்டார்..

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.