பொலிஸ் மா அதிபருக்கு சர்ச்சைக்குறிய அழைப்பை ஏற்படுத்தியது சாகல ரத்நாயக்கவே...

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் சர்ச்சைக்குறிய தொலைபேசி அழைப்பு தொடர்பில் தான் அவரிடம் விளக்கம் கோரவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்று ரத்னபுரியில் இடம்பெற்ற பொலிஸ் திணைக்கள நிகழ்வு ஒன்றின் போது பொலிஸ்  மாஅதிபருக்கு வந்த தொலைபேசி அழைப்பில் அவர் உரையாடிய விடயங்கள் தற்போது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ள  நிலையில் இன்று பாராளுமன்றில் ஜனாதிபதியிடம் விளக்கம் கோரப்பட்ட போது அவர் தான் பொலிஸ் மா அதிபரிடம் விளக்கம் கோருவதாக குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயாக்கவே இவ்வாறு பொலிஸ் மா அதிபரை தொடர்பு கொண்டு அவரை பிழையாக வழிநடத்தியதாகவும் குற்றம் சுமத்தினார்.

தெவுந்தர தேவாலயத்தின் நிலமேயாக உள்ள திஷான் விக்ரமரத்னவுக்கு எதிராக நிதி மோசடி பிரிவில் முன்னெடுக்கப்படும் விசாரனைகளில் அவரை கைது செய்யாமல் தடுக்கவே பொலிஸ் மா அதிபருக்கு குறித்த தொலைபேசி உரையாடலில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது..

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.