துமிந்த சில்வாவின் முகநூலில் புதிய பதிவுகள் - சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பிரச்சினை

பாரத லச்மன் கொலை வழக்கின் மரண தண்டனை கைதியாக சிறையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் முகநூல் பக்கங்கள், தொடர்ந்தும் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மரண தண்டனை கைதி ஒருவர் இலங்கை சட்டப்படி வெளி உலகத்துடன் தொடர்புகளை கொண்டிருக்க அனுமதிக்கப்படமாட்டார்.
எனினும், துமிந்த சில்வாவின் முகநூல் பக்கங்களில் புதிய பதிவுகள் இடம்பெற்றுவருவது சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கருத்துரைத்துள்ள சிறைச்சாலைகள் துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், துமிந்த சில்வாவின் முகநூல் பக்கங்கள் இயக்கப்படுவது குறித்து தாம் அறியவில்லை. எனினும் அது நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டுள்ள சட்டத்துறை நிபுணர்கள், குறித்த முகநூல் துமிந்த சில்வாவினால் இயக்கப்பட்டாலும் அல்லது அவருக்காக மூன்றாவது ஆள் ஒருவரால் இயக்கப்பட்டாலும் அது குற்றமாகும்.
எனவே சீ.ஐ.டி இது தொடர்பில் விசாரணை செய்யவேண்டும் என்று கோரியுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.