ஞானசாரவுக்கு எதிராக பேசுவது இனவதமாம் ; முஸ்லிம்களின் இறைவனை திட்டுவது இனவாதமில்லையாம் - நல்லாட்சி??...

தவ்ஹீத்  ஜமாஅத் செயலாளரின் விளக்கமறியல் நீடிப்பு 29.11.2016 அன்று நடந்தது என்ன? - ஞானசாரவுக்கு எதிராக பேசுவது பௌத்த மதத்திற்கு எதிராக பேசுவதாகுமா? 

தவ்ஹீத் ஜமாஅத் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்கள் ஞானசார தேரருக்கு எதிராக பேசினார் என்ற குற்றச்சாட்டில் கடந்த 16.11.2016 அன்று கைது செய்யப்பட்டு 29.11.2016 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

கடந்த 29.11.2016 அன்று மீண்டும் குறித்த வழக்கு விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித் விசாரனையில் அப்துர் ராசிக் அவர்களுக்கு பினை வழங்கக் கூடாது என கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் பொது பல சேனாவின் சார்பில் வழக்கில் ஆஜராகிய சட்டத்தரிகள் குழுவும் ஆட்சேபனை தெரிவித்தனர்.

அவர்களின் ஆட்சேபனைக்கு பதிலளித்து வாதிட்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் சட்டத்தரணிகள் குழு ஞானசார என்ற தனிமனிதருக்கு எதிராக பேசியதை மதத்திற்கு எதிராக பேசியதாக கருதி பினை மறுப்பது சட்டத்தின் பிரகாரம் ஏற்றுக் கொள்ள முடியாதது. என்று வாதிட்டனர்.

ஞானசார என்பவர் தனி மனிதனே தவிர அவர் ஒரு மதமல்ல. தவ்ஹீத் ஜமாஅத் ஆர்பாட்டம் நடத்தினால் அடித்து விரட்டுவோம் என ஞானசார மிரட்டல் விடுத்தமைக்கு எதிராகவே குறித்த ஆர்பாட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் செயலாளர் மூலம் பதிலளிக்கப்பட்டதே தவிர குறித்த ஆர்பாட்டத்தில் பௌத்த மதத்தை நிந்திக்கும் விதமாக எவ்விதமான பேச்சுக்களும் நடைபெறவில்லை என்பதை தவ்ஹீத் ஜமாஅத் சட்டத்தரணிகள் குழு தெளிவாக ஒப்புவித்தது.

வாதங்கள் முடிந்த பின் பிற்பகல் இரண்டு மணி வரை வழக்கை ஒத்திவைத்த நீதிபதியவர்கள் 03.00 மணிக்கு பினை வழங்குவது தொடர்பான தனது முடிவை அறிவித்தார்.

சுமார் 05 பக்கங்களை கொண்ட குறித்த முடிவில், தவ்ஹீத் ஜமாஅத்தின் பேச்சு சுதந்திரம், மத சுதந்திரம் போன்றவற்றை மதிப்பதுடன், தவ்ஹீத் ஜமாஅத்தின் வாதங்களையெல்லாம் ஏற்றுக் கொண்ட நீதிபதியவர்கள்.

ஞானசார என்பவர் தனி மனிதனாக இருந்தாலும் அவர் பௌத்த மதகுரு என்பதினாலும் அவர் பௌத்த மதத்தை பிரதிநிதித்துவம் செய்பவர் என்பதினாலும் அவருக்கு எதிராக பேசியமை பௌத்த மதத்திற்கு எதிராக பேசியதாகத் தான் இந்த நீதிமன்றம் கருதும் எனக் கூறி பினை தர மறுத்ததுடன், மீண்டும் 09.12.2016 அன்று வரை சகோ. அப்துர் ராசிக் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

குர்ஆனையும், நபியவர்களையும், முஸ்லிம்களையும் கடுமையாக விமர்சித்தும் அசிங்கமாக பேசியும், இம்சித்தும் வரும் ஞானசார என்பவருக்கு எதிராக பேசியமை பௌத்த மதத்திற்கு எதிராக பேசியதாகத் தான் கருதப்படும் எனக் கூறி நீதிமன்றம் 09.12.2016 வரை சகோ. அப்துர் ராசிக் அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. 

தனி மனிதருக்க எதிராக பேசுவது மதத்திற்கு எதிராக பேசுவதாக அமையும் என்றால் இஸ்லாமிய மதத்திற்கே நேரடியாக விமர்சித்துப் பேசி, அல்லாஹ்வை கேலவமாக பேசி, முஸ்லிம்களை அசிங்கப்படுத்தி, முஹம்மது நபியவர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசி வரும் ஞானசார தேரர் மீது இந்த சட்டம் பாயாதது ஏன்?

நல்லாட்சி?

இன்ஷா அல்லாஹ் குறித்த தீர்ப்புக்கு எதிராக சட்ட ரீதியாக போராடுவோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

-SLTJ Media

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.