காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக்கு மாத்திரம் 7 கோடி 20 இலட்சம் செலவுசெய்த ஷிப்லி பாறூக்

எம்.ரீ. ஹைதர் அலி
காத்தான்குடி பிரதேசத்தின் அபிவிருத்திக்கு மாத்திரம் சுமார் 7 கோடி 20 இலட்சம் ரூபாய்களை செலவு செய்திருக்கின்றோம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவத்தார். அன்மையில் அவரின் 2016ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் காத்தான்குடி மானாருல் ஹுதா பள்ளிவாயலுக்கான ஒலி பெருக்கி சாதனங்களை வழங்கும் நிகழ்வொன்று நடைபெற்றது. அதன்போதே அவர் இதனை குற்ப்பிட்டார்.  


மேலும் உரையாற்றிய அவர்,
இத்தகைய எல்லைப்புற பள்ளிவாயல்கள் அதிகளவான தேவைகள் நிறைந்ததாகவும் அவற்றின் நிருவாக செலவுகளுக்கான அதிக நிதி பற்றாக்குறை நிறைந்ததாகவும் காணப்படுகின்றது. ஆகவே இத்தகைய பள்ளிவாயல்களின் அபிவிருத்திக்கென இவ்வருடத்திற்கான எமது நிதி ஒதுக்கீடுகளில் அதிகமான நிதிகளை ஒதுக்கீடு செய்திருக்கின்றோம். 

மேலும் இப்பிரதேசத்தில் அதிகளவான அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் வெற்றிகரமாக முன்னெடுத்துவருகின்றோம். எதிர்வரும் காலங்களிலும் இத்தகைய தேவையுடைய பிரதேசங்களை இனங்கண்டு தொடர்ச்சியாக பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளவுள்ளோம் என தெரிவித்தார். 

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.