இலங்கை மற்றும் தமிழகத்திற்கு காத்திருக்கும் பேராபத்து - விஞ்ஞானிகள் எச்சரிக்கை

எதிர்வரும் காலங்களில் வங்கக் கடலில் அதிக அளவில் புயல்கள் உருவாகும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அலகாபாத் பல்கலைக் ஸ்ரீகழகத்தை சேர்ந்த அசுதோஸ் மிஸ்ரா தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளால் கடல் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வங்கக்கடல் பகுதியில் இனி வெப்ப மண்டல புயல்கள் அதிக அளவில் உருவாகுமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள புயலுடன் ஒப்பிடும்போது, இந்த புயல்களின் சக்தியும் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
2014ஆம் ஆண்டு இது குறித்து ஆய்வுகளை மேறகொண்டு எர்த் சயன்ஸ் என்னும் அறிவியல் பத்திரிகையில் கட்டுரை ஒன்றையும் இந்த குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, 1891ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையான சுமார் 122 ஆண்டுகளில் இந்திய கடல் பகுதியில் ஏற்பட்ட புயல்கள் தொடர்பில் ஆய்வு செய்து குறித்த கட்டுரை எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அண்மைய நாட்களாக வங்கக்கடலில் ஏற்பட்ட புயலின் காரணமாக பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த இரு நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட வர்தா புயலின் காரணமாக இலங்கை உள்ளிட்ட தமிழகத்தில் பாரிய சேதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.