பதிவு செய்யப்படாத பள்ளிவாசல்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவும் - அலி ஸாஹிர் மௌலானா

08.12.2016ம் திகதி புத்த சாசன, கிறிஸ்தவ ,சுற்றுலாத்துறை, முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் சேவைகள் ,அமைச்சுக்களினது நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அலி ஸாஹிர் மௌலானா பள்ளிவாயல்கள் பதிவு செய்யப்படுவதில் ஏற்படும் காலதாமதம் தொடர்பில் சபையின் கவனத்திற் கொண்டுவந்தார்.
கௌரவ முஸ்லிம் சமய கலாசார தபால் சேவைகள் அமைச்சர் அவர்களே!
முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பள்ளிவாயல்களை பதிவு செய்யும் செயற்பாடுகள் மிகவும் தாமதமாக இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எமது பிரதேசத்தில் பதிவுசெய்யபடாதிருக்கும் அனைத்துப் பள்ளிவாயல்களையும் காலதாமதமின்றி உடன் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
பல பள்ளிவாயல் நிருவாகங்கள் சீரற்றுக்காணப்படுகின்றது. நிருவாகத்தினரால் வக்பு சொத்துக்கள் முறையீனமாக கையாளப்படுகின்றது, உரிய பதவிக்காலம் முடிவடைந்த பள்ளிவாயள்களின் புதிய நிருவாகத்தினை விரைவாக தெரிவு செய்வதற்கு திணைக்களம் நடவடிக்கை எடுப்பதுடன் பள்ளிவாயல்களின் நிருவாகரீதியான செயற்பாடுகள் மேற்பார்வைகளை வலுப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.