மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடி அபகரிப்பு - நாளை மஸ்ஜித் சம்மேளனம் ஆர்ப்பாட்டம்

மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடிக்கு சொந்தமான காணியை அபகரித்து நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறி தனியார் நிறுவனமொன்று 8 மாடிக் கட்டிடமொன்றை நிர்மாணித்து வருகின்றது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.குறித்த ஆர்ப்பாட்டத்தினை மாளிகாவத்தை மஸ்ஜித் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் குறித்த சங்கத்தினால் பல முறைப்பாடுகள் அடங்கிய அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. மையவாடிக் காணிக்கென 36 ஏக்கர் உரித்துடையவை. ஆனால் அவற்றுள் 26 எக்கர் வரை தட்டி பறிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் நீதி மனை்றில் வழக்கு தொடர்ந்த போதும் உரிய வகையான தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை. நீதி மன்றின் தடை உத்தரவையும் மீறி தனியார் நிறுவனம் தமது கட்டிட விஸ்தரிப்பை மேம்படுத்தி வருகின்றது.
மாளிகாவத்தை மையவாடிக் காணியை பாதுகாப்பதற்காக இலங்கை முஸ்லிம் மத உரிமைகள் சங்கம் கடந்த 15 வருடங்களாக போராடி வருகிறது.
நீதிமன்ற உத்தரவினையும் மீறி முன்னைய அரசாங்கத்தின் உயர் பீடங்களின் ஒத்துழைப்புடன் 8 மாடிக் கட்டிட நிர்மாணம் சிறப்பாக நடந்து வருகின்றது.
எனவே, இச்செயலைக்கண்டித்து கொழும்பு மாநகர சபை நகர மண்டபம் கட்டிடத்துக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.