கர்நாடகாவில் இறுதி சடங்கு நடத்திய ஜெயலலிதாவின் உறவினர்கள்

ஜெயலலிதாவின் ஆன்மா மோட்சம் அடைய கர்நாடகாவில் அவரது உறவினர்கள் இந்து முறைப்படி இறுதிச்சடங்குகளை நடத்தியுள்ளனர்.
முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5ந் திகதி சிகிச்சை பலனின்றி அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார்.
இதையடுத்து அவரது உடல், மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் மறைந்த ஜெயலலிதாவின் ஆன்மா மோட்சம் அடைய கர்நாடகாவில் அவரது உறவினர்கள் இந்து முறைப்படி இறுதிச்சடங்குகளை நடத்தியுள்ளனர்.

கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமின் மூத்த மனைவி ஜெயம்மாவின் மகன் தான் இறுதிச்சடங்குகளை முன்நின்று நடத்திய இந்த வாசுதேவன்.
இவர் ஸ்ரீரங்கபட்டணாவில் காவிரி நதிக்கரையில் புரோகிதரால் மறு இறுதிச்சடங்கினை நடத்தினார். இந்த சடங்கில் ஜெயலலிதாவின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.