பிரித்தானிய பெண் மீது இந்திய இளைஞர் பாலியல் சேட்டை - டுபாய் நீதிமன்றம் 3 மாத சிறை தண்டனை விதிப்பு

டுபாயில் பிரித்தானிய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 3 மாதகால சிறை தண்டனை விதித்துள்ளது.
23 வயதான இந்திய இளைஞர் ஒருவருக்கே இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டுபாயில் இருந்து வெளிவரும் "கலீஜ் டைம்ஸ்' செய்தித்தாள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த வியடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுபாயில் பல்பொருள் அங்காடியில் பணிபுரியும் குறித்த இளைஞர், தனிமையில் இருந்த 35 வயதான பிரித்தானிய பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.
எனினும், பாதுகாவலர்களை அழைப்பேன் என பெண் எச்சரித்ததை அடுத்து குறித்த இளைஞர், தப்பித்து சென்றுள்ளதாகவும், பெண் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்தேகநபருக்கு எதிராக ஆதாரங்களை பொலிஸார் முன்வைத்ததையடுத்து, அவருக்கு 3 மாத சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதேவேளை, தண்டனைக் காலம் முடிவடைந்த பின்னர், குறித்த இளைஞர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.