5000 ரூபா தொடர்பில் வெளியான தகவல் உண்மையல்ல - நிதி அமைச்சர்

5000 ரூபா நோட்டை ரத்து செய்வதாக தாம் கூறவில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், இந்தியாவில் நாணயத் தாள்கள் ரத்து செய்த பிரச்சினைக்கு ஏதுவான காரணிகள் இலங்கையிலும் இடம்பெறுகின்றமையினால் அது குறித்து ஆராயப்பட வேண்டும்.
5000 ரூபா நோட்டுக்களை மத்திய வங்கி மீளப் பெற்றுக்கொள்ளும் என நான் கூறவில்லை. அண்மையில் நாடாளுமன்றில் நான் கூறிய இந்த விடயத்தை ஊடகமொன்று பிழையாக செய்தி அறிக்கையிட்டிருந்தது.
இவ்வாறு தேசிய விரோத செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என நான் திவயின பத்திரிகையிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலின் கையாட்கள் ரூபாவினை பெறுமதியிழக்கச் செய்ய முயற்சிக்கின்றனரா? இவ்வாறு பிழையான செய்திகளை வெளியிடுவதனால் நாட்டுக்கே பாதிப்பு ஏற்படக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்றில் நிதி அமைச்சர் ஆற்றிய உரை பற்றிய செய்தியை தாம் மட்டுமல்ல மேலும் சில தேசிய பத்திரிகைகளும் செய்தி அறிக்கையிட்டிருந்தன என திவயின சுட்டிக்காட்டியுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.