பர்தாவுடன் பரீட்சை எழுதவிடாத பரீட்சாத்தி ; துணிந்து பேட்டி வழங்கிய மாணவி - நடவடிக்கை எடுக்குமா நல்லாட்சி அரசு?..


தற்பொழுது நடைபெற்று வரும் க.பொ.த. சா.தரப் பரீட்சைக்கு   மட்டக்குளியைச் சோந்த 10க்கும் மேற்பட்ட  முஸ்லீம் மாணவிகள் வெளிவாரியாக பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.


கடந்த 5 நாட்களாக நடைபெற்ற பரீட்சையின் போது  பரீட்ச்சை மண்டபத்திற்குள் தங்களது தலையில்  அணியும் பர்தாவை கழற்றி மேசையில் வைத்துவிட்டே பரீட்சை எழுதி வருவதாக  துணிந்து ஒரு மாணவி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

பரீட்சை நிலையத்தின் கடமையுள்ள  பிரதான பரிசோதகரே இதனைக் கண்டிப்பாக நடைமுறைப்படத்தியதாகவும்.   கொழும்பு -15 டிலாசல் கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றும்  சகல முஸ்லீம் மாணவிகளுக்கும் இவ்வாறு தலையை மறைக்கும் ஹிஜாபை கழற்றிவைத்து விட்டே  6  பாடங்களுக்கான பரீட்சை எழுதி வருவதாக  அம் மாணவி தெரிவித்தார்.
இவ்வாரான ஜனநாயக உரிமையை பரிக்கும் செயற்பாடுகளுக்கு நல்லாட்சி அரசு என்ன பதில் சொல்லப்போகிறது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.