முஸ்லிம்கள் ஒன்றையும் கேட்க வில்லை நிம்மதியாக வாழ விடுங்கள் – அமைச்சர் றிஷாத்

முஸ்லிம்கள் இந்த அரசிடம் ஒன்றையும் கேட்கவில்லை. எம்மை இந்த நாட்டில் நிம்மதியாக வா விட்டால் போதும் அதனையே நாம் கேட்கின்றோம் என்றார். முஸ்லிம் மாணவர்களின் கல்வித் தரத்தினை மேம்படுத்தி அவர்களை ஊக்குவிப்புச் செய்யும் வகையில் நாடாளவிய ரீதியில் கடந்த 2015இல் க.பொ.த.சாதாரண தரத்தில் ஒன்பது ஏ (9A) சித்தி பெற்ற மாணவர்கள் சுமார் 198 பேர் முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்ககத்தினால் கௌரவிப்பு நிகழ்வு கடந்த ஞாயிற்றுக் கிழமை (11) அமைப்பின் தலைவர் அஹமட் எம். முனவ்வர் தலைமையில் கொழும்பு-07இல் உள்ள பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றபோது பிரதம அதிதியாக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
மிகவும் முக்கியமானதொரு நிகழ்வாகும், இந்நிகழ்வை சிலர் அறிந்திருந்தாலும் சிலர் அறியாத காரணத்தினால் இவ்வாறான விழாக்களை அல்லது நிகழ்வுகளை அல்லது சதர்ப்பங்களை தவறவிடுகின்றனர். அஹமட் முனவ்வர் இந்த நல்ல பணியைச் செய்திருக்கின்றார். மிகவும் கடமைப்பாட்டுடன் பலரின் உதவிகளின் மத்தியில் செய்யும் இந்நிகழ்வின் தாற்பரியங்களை புரிந்தவர்கள் சிலர்தான் உள்ளனர் எனலாம்.
ஒன்பது ஏ சித்தி பெற்றவர்களை அழைத்து நல்லுபதேசம் செய்து மேடையில் ஏற்றி உங்களுடைய பெற்றோர்களுக்கு முன்னாள் கௌரவப்படுத்துகின்ற இந்த நிகழ்வு மூலம் பெற்றெடுத்த தாய், தந்தையர் சந்தோசப்படுகின்றனர்.
ஒரு பிள்ளை பெற்ற தாயையும் தந்தையையும் சந்தோசப் படுத்துகின்றார்களோ அல்லது திருப்திப் படுத்துகின்றார்களோ அவர்களுக்கு அல்லாஹ் சொர்க்கத்தினை தயார்படுத்தி வைக்கின்றான். சுவர்க்கத்தில் இரண்டு வாசல்கள் என்றால் ஒன்று தாயுடையதும் மற்றயது தந்தையுடையதுமாகும்.
தாயையும், தந்தையையும் எந்தப் பிள்ளை அவர்களுடைய மரணம் வரை பரிபாலனம் செய்து அந்த இரண்டு பேருடைய திருப்தியை அந்தப் பிள்ளை பெறவில்லை என்றால் அந்த இரண்டு வாசல்களும் மூடப்பட்டு விடும்.
சிலருக்கு தாய் இருக்கலாம், சிலருக்கு தந்தை இருக்கலாம் சிலருக்கு இருவருமே இருக்கலாம் சிலருக்கு ஒருவர் இருக்கலாம் மரணித்தவர்களைத் தவிர இருப்பவர்களை பார்ப்பது கடமையாகும். எமது சமுதாயத்தில் வைத்தியர்களாக, பொறியிலாளர்களாக, அரசியல் வாதிகளாக, உயர் பதவிகளில் உள்ளவர்களாக, ஏதாவது ஒன்றில் உயர்ந்தவர்களாக இருக்கின்றவர்கள் இவர்கள்தான் என்னுடைய தாய், தந்தை என்று அறிமுகப்படுத்தவதற்கு வெட்கப்படுகின்றதைக் காண முடிகின்றது.
அதனை ஒரு தாழ்வு மனப்பான்மையாக பார்க்கின்ற பிள்ளைகளைப் பார்க்கின்றோம். அன்பார்ந்தவர்களே நீங்கள் எவ்வளவுதான் கெட்டிக்காரர்களாக இருந்தாலும் அல்லது உங்கள் பெற்றோர்கள் கெட்டிக்காரர்களாக இருந்தாலும் எவ்வளவுதான் உங்களை படிக்க வைக்கின்ற விடயத்தில் கவனமாக இருந்து இந்த நிலைக்கு கொண்டு வந்தாலும் அல்லாஹ்வுடைய நாட்டம் இல்லா விட்டால் நீங்கள் யாரும் இந்த நிலையை அடைந்துவிட முடியாது.
எனவே இந்த நாட்டில் சுமார் 22 இலட்சம் முஸ்லிம்கள் வாழுகின்றார்கள் அதிலே இலட்சக்கணக்கான மாணவர்கள் வாழ்ந்து கொண்டு இருப்பவர்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதுகின்றார்கள். அதிலே இந்த 198 அல்லது 200 மாணவ்hகளுக்கு ஒன்பது ஏ சித்தியைப் பெறுவதற்கு அல்லாஹ் சந்தர்ப்பத்தினைக் கொடுத்திருக்கின்றான்.
எனவே மாணவர்கள் ஒன்பது ஏ எடுத்தவுடன் தலையிலே அடித்து விடும் நான் கெட்டிக்காரன் நான் 9ஏ எடுத்தேன் அதேபோல் க.பொ.த. உயாத்தரத்திலும் 3ஏ எடுப்பேன் கெம்பஸ் செல்வேன் வைத்தியராகுவேன், பொறியிலாளராக ஆகுவேன் என்று மமதை கொள்கின்றதைப் பார்க்கின்றோம்.
9ஏ எடுத்தவர்கள் 3ஏ எடுத்த வரலாறுகளும் உள்ளது. ஐந்தாம் ஆண்டு சித்தியடைந்த 9ஏ எடுத்து உயர் தரத்தில் ஒன்றுமே எடுக்காதவர்களையும் திரும்ப ஆர்ட்ஸ் படித்து வெளிவாரியாக பரீட்சை எழுதபவர்களையும் பார்க்கின்றோம். ஏன் நான் அதைச் செல்கின்றேன் என்றால் அல்லாஹ் உங்கள் பெற்றோர்களின் நல்லெண்ணத்தை அவர்களின் துஆவை உங்களின் திறமை, முயற்சி அவர்கள் உங்களுக்கு தந்திருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தினை ஒரு அடித்தளமாக வைத்துக் கொண்டு இஸ்லாமிய உணர்வுகளுடன் தாய். தந்தையர்களுக்கு கட்டுப்பட்டு உயர் தரத்தினை சீராக செய்து முடிப்பதற்கு முழுக் கவனத்தினையும் செலுத்தி நீங்கள் படித்து முடிப்பீர்களானால் 3ஏயுடன் பொறியிலாளராக, மருத்துவர்களாக என்று ஏனைய துறைகளுக்குச் செல்லலாம்.
எனவே அல்லாஹ்வின் பயம், பெற்றோர்களின் நன்மதிப்பும். துஆவும் ஒழுங்காக தகஜ்ஜத் மற்றும் சுபுஹ் தொழுகைகைள தொழுது காலையிலேயே ஓதவேண்டிய துஆக்களை ஓதி படத்தை வீட்டிலும் படித்து பாடசாலையிலும் சிறந்த முறையில் படித்து நீங்கள் 2 வருடத்திற்கு கண்ணும் கருத்துமாக காலத்தை கழிப்பீர்களானால் 3ஏ ஐ விட இன்னும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பெற்றோர்களை மகிழ்விப்பீர்கள். நாளை உங்களுடைய எதிர்காலம் வைத்தியராக, பொறியியலாளர்களாக, சட்டத் தரணிகளாக, முகாமைத்துவர்களாக, கலைத்துறை சார்ந்தவர்களாக பரீட்சிக்கும் ஒரு பரீட்சையாக உயர்தரப் பரீட்சை அமைகின்றது.
இன்றைய நிலையில் மொபைல் போன்கள் சமுதாயத்தினை சீரழிக்கும் ஒன்றாக அவர்களை அதில் மூழ்கடித்து கல்வியை வீழ்த்தி நாசப்படுத்துகின்றது. உயர்தரப் பரீட்சைக்குப் பிறகு பறவாயில்லை நான் ஒரு அமைச்சராக இருந்தும் எனது மகளை நான் மொபைல் பாவிக்க விடவில்லை அவர் பாவிப்பதும் இல்லை. இது பெற்றோரின் கடமையாகும். வைத்தியராக, பொறியிலாளராக வரவேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்ய முடியாது.
இந்தக் குறுகிய கலாத்தில் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காக சஹாப்பாக்கள் சிறப்பாக வாழ்ந்து காட்டினார்கள். அது கல்வியாக இருக்கலாம் அல்லது எந்தத் துறையாகவும் இருக்கலாம் ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என அல்லாஹ் சிறப்பாக குறிப்பிட்டுள்ளான். கல்வி, அரசியல், வியாபாரம், கூலித் தொழில் எந்தத் துறையாக இருந்தாலும் அது இன்னொரு சமுகத்திடத்திலோ, இன தரப்படுத்தலிலோ, இன்னொருவரிடத்தில் கேட்கின்ற வெற்றிடத்தை அல்லாஹ் நபியவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் வைக்க வில்லை. பிள்ளைகள் தவறான வழியில் செல்பவர்களாக இருந்தால் அதனை தடுத்து நிறுத்தும் பொறுப்ப பெ;றோர்களுக்கு இருக்க வேண்டும். பிள்ளைகள் ஒவ்வொன்றும் அமானிதம். பிள்ளை வளர்ப்பு விடயத்தில் ஒவ்வொரு தாயும், தந்தையும் பதில் சொல்லியாக வேண்டும். இல்லா விட்டால் அல்லாஹ்விடத்தில் மாட்டிக் கொள்ள வேண்டும்.
இன்று நிறைய வியாபாரிகள் வட்டியிலேயே மிதக்கின்றனர். மரணத்தின் பின் ஒன்றும் வராது வங்கி வீடுகளையும் சொத்;துக்களையும் எடுத்துவிடும் பிள்ளைகள் வாடகை வீட்டில் இருக்கும் நிலையை கண்டு கொள்கின்றோம். வட்டியில் வெற்றி இல்லையென்று இஸ்லாம் சொல்கின்றது. எப்படியும் வாழ முடியாது இப்படித்தான் வாழ வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது.
நவீன போன் பாவனைகளை இந்த 198 மாணவர்களும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் அத்தியாவசியப் பாவனைக்கு சாதாரண ஒரு போனை தேவைக்கு மட்டும் பாவிக்க வேண்டும். இன்று இஸ்லாமியர்கள் உலகெங்கும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 50க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகளில் இரத்த ஆறு ஓடுகின்றது. இஸ்ரேல் ஒரு சிறியா நாடாக இருக்கின்றது. ஆனால் இஸ்லாமிய நாடுகள் பல வளங்களையும் குறிப்பாக எண்ணை, தங்கம் உள்ளிட்ட வளங்களைக் கொண்டுள்ள போதிலும் இந்நாடுகளில் இஸ்லாம் இல்லாத காரணத்தினால் வெடிச்சத்தங்களும், அழிவுகளும், கொலைகளும் மரணங்களும் தொடர்ந்த இடம் பெறகின்றன.
மியன்மார் முஸ்லிம்கள் அநியாயமான முறையில் அடித்துக் கொலை செய்யப்படுகின்றனர். வெறி பிடித்தவர்கள்போல் அட்டகாசம் செய்கின்றனர். இந்த 50க்கும் மேற்பட்ட நாடுகள் இருந்தும் கலிமாச் சொன்னதற்காகவும் முஸ்லிம் என்ற காரணத்திற்காகவும் அழிக்கப்படும் அந்த மக்கள் தொடர்பாக எந்வொரு முஸ்லிம் நாடுகளம் போய்க் கேட்க நாதியில்லாமல் இருப்பதுடன் சும்மா அறிக்கைளை விட்டும், ஒரு பிரதிநிதியை அனுப்பி விட்டு ஒன்றுமே நடைபெறாத நிலைமைகளே காணப்படுகின்றன.
இதேபோல் இலங்கையிலும் சில நாசகார விஷம சக்திகள் மதகுருக்கள்; என்ற போர்வையில் ஒற்றுமையாக மன்னராட்சிக் காலந்தொட்டு வாழுகின்ற சிங்கள முஸ்லிம் உறவுகளை உடைத்து சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை நசுக்கி அழிக்கவும் நிம்மதியாக வாழவும், இன்றுள்ள நல்ல சூழ்நிலைகளை இல்லாமலாக்கி அடிமைகளாக்கவும், கோலைகளாகவும் மியன்மாரில் நடைபெறும் துன்பத்தைப்போல் இங்கும் ஏற்படுத்தவும், நாடு பூராகவும் சிதறி வாழும் முஸ்லிம்களையும் சேர்ந்து வாழும் சிங்கள மக்களிடத்திலும் பெரிய இடைவெளியை எற்படுத்தி பார்க்க முனைகின்றனர்.
தொப்பி போட்டவர்களையும், ஹபாய அணிந்தவர்களையும் வெறுப்புற அல்லது ஆத்திரம்வர அல்லது பயம் வருவதற்கு அல்லது இவர்கள் எதையோ செய்யப் போகின்றார்கள் என்ற ஒரு நிலையை இந்த நாட்டில் ஏற்படுத்த சதிகாரர்கள் முனைகின்றனர்.
முழு முஸ்லிம்களும், அரசியல் வாதிகள், அமைச்சர்கள் ஒன்றுபட்தால் மாற்றத்தை ஏற்படுத்தலாம். மார்க்க விடயங்கள், மதம், பொருளாதாரம், கல்வி, வாழ்க்கை, நிம்மதி இவற்றை இழந்து நிற்கின்றோம். இவற்றைச் செய்து வருபவர்கள் இன்று பயப்படும் நிலைமைகள் இருந்ததால் ஒன்றுபட்டு ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்பட்டு நல்லாட்சி வந்தது என்றும் நிம்மதியாக வாழலாம் என்றும் நினைத்தோம். நாங்கள் தனிநாடு கேட்க வில்லை. இந்த அரசில் அரசியலமைப்பை மாற்றி அதிகாரங்களை அதிகரியுங்கள் என்று சிலர் கேட்கின்றனர். கட்சிகள் கேட்கின்றன. நானோ, றவுப் ஹக்கீமோ, கபிர் காசிமோ, பைஸர் முஸ்தபாவோ அல்லது பௌசியோ நாங்கள் யாரும் கேட்கவில்லை.
சிலர் தேர்தல் முறைகளை மாற்ற வேண்டும் என்று கேட்கின்றனர். நாங்கள் கேட்க வில்லை. இருக்கின்ற தேர்தல் முறைதான் நல்லதென்று உறுதியாகச் சொல்கின்றோம். இதை மாற்றினால் எங்களுக்கு நஷ்டம் இதேபோல் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்க வேண்டும் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் கேட்கின்றது, அதிகாரப் பகிர்வை தமிழரசுக் கட்சி கேட்கின்றது. இந்த மூன்றையும் இந்த நல்லாட்சி செய்ய நீண்ட நேரத்தை செலவழித்து பல கூட்டங்களை கூட்ட வேண்டியுள்ளது.
நாங்கள் கேட்பதெல்லாம் எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள். எங்களை எங்களுடைய மார்க்கப்படி 5 நேரம் தொழ வேண்டும் என்ற இஸ்லாம் வழியுறுத்தியுள்ளது. அதன்படி செய்ய விடுங்கள். இஸ்லாம், பௌத்தம், இந்து, கத்தோலிக்கம் எல்லமே தத்தமது மார்க்கக் கடமைகளைச் செய்வதற்கு இந்த நாட்டின் அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ளது அதைத் ததாருங்கள் என்று தான் கேட்கின்றோம்.
அவற்றை செயற்படுத்தி நிம்மதியாக வாழ விடுங்கள் என்றே சொல்கின்றோம். படிப்பதற்கு உரிமை இருக்கின்றது. எவ்வாறு மார்க்கம் சொன்னதோ அவ்வாறு செயற்படுவதற்கு இந்த நாட்டின் அரசியலமைப்பு இடங் கொடுத்திருக்கின்றது. அவ்வாறு வாழ்வதற்கான இடத்தையே கேட்கின்றோம். ஒன்றுமே உடம்பில் இல்லாது பார்ப்பதற்கு அசிங்கமான ஆடைகளை சில ஆண், பெண்கள் உடுத்திக் கொண்டு பாதைகளிலே செல்கின்றனர் பார்ப்பதற்கு வெட்கமாகவுள்ளது. பலர் இதைப்பற்றிப் பேசுகின்றார்கள் இல்லை. கௌரவமாக தலையை மூடி கொண்டு தொப்பி, ஹபாயா அணிந்த சென்றால் அவர்களுக்கு அச்சமும் பயமும் ஏற்படுகின்றது என்று திட்டமிட்டு சதி செய்கின்றனர்.
சிங்கள மக்களும், பௌத்தர்களும் நல்லவர்கள். சீதாவாக்கை மன்னர் காலத்திலிருந்து பௌத்த முஸ்லிம் உறவுகள் இருந்து வருகின்றது. இதனைக் கெடுக்க நாசகார சக்திகளும், அதற்குப் பின்னால் இருக்கின்ற ஒருசில தேரர்களும் முயற்சிக்கின்றனர். தேர்தலில் வெற்றி பெற்றுக் கொள்வதற்கு இவர்கள் எடுத்த முயற்சியை ஒட்டுமொத்த பௌத்த மக்களும் நிராகரித்தமையையிட்டு நாம் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
இன்று சோசியல் மீடியாக்களில் ஒருசில தீய சக்திகள் இஸ்லாத்தையும், அதன் விழுமியங்களையும் விமர்சித்து கேவலப் படுத்துகின்றனர். அதற்குப் பதிலாக முஸ்லிம் இளைஞர்களும் முஸ்லிம்களின் பெயரைப்பயன்படுத்தி வேறு சிலரும் பௌதத் மக்களின் கடவுலான புத்தபிரானை தாக்கி கொமன்ஸ் போடுகின்றார்கள். அன்பான வேண்டுகோல் விடுக்கின்றேன் இஸ்லாம் அவ்வாறு செய்யச் சொல்ல வில்லை. மற்ற மதத்துடன் எவ்வாறு வாழ வேண்டும் என இஸ்லாம் சிறப்பாக சொல்லி இருக்கின்றது.
நம்றூசி மன்னன் நபியவர்களுடன் புனித மஸ்ஜிதுன் நபவியிலே பேச்சுவார்த்தைக்கு வருகின்றார்கள்.
பெரும்பான்மையான முஸ்லிம்களின் ஆட்சியில் சிறுபான்மையாக அவர்கள் நபியவர்களிடம் வந்தபோது நபியவர்கள் நம்றூசியிடம் நீங்கள் உங்களுடைய மார்க்கத்தை பின்பற்றுங்கள், உங்களுடைய கொள்கைகளுடன் வாழுங்கள் நாங்கள் இடஞ்சல் தரமாட்டோம் என்று கூறி ஒப்பந்தம் செய்கின்றார்கள்.
அப்போது அவர்களின் வணக்க நேரம் வருகின்றது மதக்கடமையைச் செய்ய வேண்டும் எனக் கேட்க நபியவர்கள் மஸ்ஜிதுன் நபவியையே காட்டுகின்றார்கள் நீங்கள் இங்கு மதக்கடமைகளைச் செய்யுங்கள் என்று இதுதான் இஸ்லாம். இஸ்லாம் ஒருபோதும் மற்ற மதத்தையோ மற்ற மததத் தலைவர்களையோ கேவலப்படுத்துகின்ற, அசிங்கப்படுத்துகின்ற விடயத்தை வழியுறுத்த வில்லை.
இந்த வகையில் முஸ்லிம்கள் சகோதர பௌத்த மதத்தை தாக்கிப்பேசவோ அல்லது எழுதவோ அல்லது அவர்களின் மனங்களைப் புண்படும் அளவிற்கு கருத்துக்களும், எழுத்துக்களும் இருக்கக்கூடாது. நாசகார சக்திகளை முஸ்லிகளும், பௌத்தர்களும் தேர்தலில் தோற்கடித்தார்கள். அவர்களின் கொள்கை, நோக்கம், சதிகள் எல்லாவற்றையும் நிராகரித்தார்கள் எனவே பெரும்பான்மை பௌத்த மக்களிடத்தில் நல்லெண்ணத்தை முஸ்லிம்கள் பெறவேண்டும்.
அரசியல் வாதிகளான எங்களிடத்தில் அந்தப் பொறுப்பைத் தந்தவிட்டு நீங்கள் உங்களுடைய கடமைகளைச் செய்யுங்கள். நாங்கள் அரசுடன் இருக்கின்றோம் நாங்கள் அதனைப் பார்த்துக் கொள்வோம். அவர்கள் எமக்கும் உங்களுக்கும் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு அவர்களுக்கு உண்டு.
இந்த வகையில் எமது சமுதாயம் அச்சப்படத் தேவையில்லை நானும் பல தடைகளுக்கு மத்தியில் கஷ்டப்பட்டுத்தான் படித்து முன்னுக்கு வந்துள்ளேன் நீங்களும் அந்த இலட்சியத்தோடு செல்லுங்கள்.
முஸ்லிம் சமுகத்திற்குகென ஒரு நிலையான ஊடகம் இல்லை, தொலைக்காட்சி இல்லை, பத்திரிகை இல்லை. ஆங்கிலப் பத்தரிகையோ அல்லது சிங்களப் பத்திரிகையோ தனியாக இல்லை. ஆனால் சிறந்த ஊடகவியலாளர்கள் இருக்கின்றனர். அவர்களை தரமுயர்த்த வியாபார சமுகம் தவறி விட்டது.
பணத்திற்காக திரிகின்றனரே தவிர சமுதாயத்தைக் கண்டு கொள்வதில்லை. இன்று பள்ளிவாசல்களுக்கு அருகில் பெருமளவான ஏழைகள் காணப்படுகின்றனர். உரிய முறையில் ஸக்காத் கொடுத்தால் எமத சமுகத்திற்க இந்த நிலை ஏற்படாது.
கல்விக்கு உதவ மாட்டார்கள் தமது பிள்ளைகளை இலட்சக் கணக்கில் பணம் செலவழித்து வெளிநாடுகளில் படிக்க வைப்பார்கள் அவர்கள் வரும்போது வெள்ளைகாரியை கட்டிக் கொண்டு வருவார்கள் அல்லது வெளிநாட்டுக் கலாச்சாரத்துடன் வருவார்கள்.
எமது சமுதாயத்தினை சரியாக வழி நடத்த வேண்டியுள்ளது. 50க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகளில் இரத்த ஆறு ஓடுகின்றது. 10 சதவீதம் உள்ள முஸ்லிம்களை மியன்மாரில் ஆடு, மாடுகளைப்போல் நாளாந்தம் ஈவிரக்கமற்ற முறையில் கொன்று குவிக்கின்றனர். அதனை தட்டிக் கேட்க எந்தவொரு முஸ்லிம் நாடுகளும் தயாரில்லை.
எனவே நாம் அரசியல், பொரளாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முன்னேற வேண்டும். மார்கத்தை முன்னேற்ற வேண்டும், நமது சமுகத்திற்கு உதாரண புருஷர்களாக மாற வேண்டும்.
இன்னொரு சமுதாயத்தை அழிப்பதற்கோ, தாக்குவதற்கோ, அவர்களுடன் மோதுவதற்கோ அல்ல எல்லோரும் குறிப்பாக பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க மக்கள் அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றார் அமைச்சர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.