புத்தர் சிலைகளை திருடிய பௌத்த பிக்குவிற்கு பிணை

புத்தர் சிலைகளை திருடிய பௌத்த பிக்குவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் கடபனஹா புத்தகயா மாவத்தையில் அமைந்துள்ள அனகாரிக்க தர்மபால பௌத்த மத்திய நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பழமையான புத்தர் சிலைகள் உள்ளிட்ட சில பெறுமதியான பொருட்களை இந்த பௌத்த பிக்கு திருடிச் சென்றுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த பௌத்த பிக்குவை பிணையில் விடுவிக்குமாறு அனுராதபுரம் மேலதிக நீதவான் நதீகா டி பியரட்ன நேற்று உத்தரவிட்டார்.
புத்தர் சிலைகளை தாம் திருடியதாக பௌத்த பிக்கு நீதிமன்றில் ஒப்புக்கொண்டார்.
அனுராதபுரத்தைச் சேர்ந்த கல்கமுவே தர்மஜோதி என்ற பௌத்த பிக்குவே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
புத்தர் சிலைகளை திருடிச் செல்ல முயற்சித்த போதே பொலிஸார் பௌத்த பிக்குவை கைது செய்த காரணத்தினால் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று கொண்டு வந்த சந்தர்ப்பத்தில் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு தெரிவிக்காது இவ்வாறு தர்மபால பௌத்த மத்திய நிலையத்திற்கு சென்று சிலைகளை திருட முயற்சித்தமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.