அரசியல் அதிகாரம் வழங்கப்பட்டால் என்ன ஆட்டம் போடுவார்கள் ? ஞானசார தேரர் கேள்வி ...

அரசியல் அதிகாரம் வழங்காமல் இந்த ஆட்டம் போடுபவர்கள் புதிய அரசியல் அமைப்பின் ஊடாக அரசியல் அதிகாரம் வழங்கினால் என்ன ஆட்டம் போடுவார்கள் என ஞானசார தேரர் கேள்வி எழுப்பினார்.

நேற்றுமுன்தினம் மட்டக்களப்புக்கு சென்ற பொதுபல உள்ளிட்ட குழுவை அங்கு செல்லவிடாது தடுத்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடந்து கருத்து வெளியிட்ட அவர்...

நாங்கள் இந்த நாட்டு பிரஜைகள் எங்களுக்கு நாட்டில் எந்த பிரதேசத்துக்கு சென்றும் அங்கு மதவழிபாடு செய்ய அனுமதி உள்ளது.ஆனால் நேற்று எமக்கு மட்டகளப்பு செல்ல இனவாதிகளால் தடை விதிக்கப்பட்டது.அரசியல் அதிகாரம் வழங்காமல் இந்த ஆட்டம் போடுபவர்கள் புதிய அரசியல் அமைப்பின் ஊடாக அரசியல் அதிகாரம் வழங்கினால் என்ன ஆட்டம் போடுவார்கள் என்பதை சிந்திக்க வேண்டிய தருனம் இப்பொது வந்துள்ளது.

புதிய அரசியல் அமைப்பு என்ற பெயரில் இந்த இனவாத சக்திகளுக்கு அதிகாரம் வழங்கப்பட உள்ளது.எமது பௌத்த தலைவர்கள் உடனடியான விழித்துக்கொள்ள வேண்டும் என நான் எமது மதத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன் என அவர் மேலு குறிப்பிட்டார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.