க.பொ.த. பரீட்சை 6 ஆம் திகதி : ஆட்பதிவுத் திணைக்களம் விசேட அறிவித்தல்

எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள், இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாதிருப்பின், 5 ஆம் திகதிக்குள் அதனைப் பெற்றுக் கொள்ளுமாறு ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்காகவேண்டி விசேட கரும பீடம் ஒன்றும் திறக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சரத் குமார ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இப்பரீட்சை 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. நாடு முழுவதுமுள்ள 5669 பரீட்சை நிலையங்களில்  இப்பரீட்சை நடைபெறவுள்ளதுடன்,  538 இணைப்பு நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இப்பரீட்சையில் சுமார் 7 லட்சம் பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகவும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.