மட்டக்களப்பில் பதற்றத்தின் எதிரொலி, தீக்குளிக்கப்போவதாக எச்சரிக்கை (Video)

மீண்டும் மதவாதச் சிந்தனையின் மூலமாக நாட்டில் இனங்களுக்கிடையில் பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு, அரசாங்கத்தை மட்டுமல்லாது, தமிழ் முஸ்லிம் மக்களை ஆட்டங்காணச் செய்தற்கான முயற்சிகள் வெகுலாவகமாக மேற்கொள்ளப்பட்டுவருவதனை அவதானிக்க முடிகின்றது.
மட்டக்களப்பு நகருக்குள் இருக்கும் பல வீதி வழியாக தமிழ் மக்களை துவேச வார்த்தைகளால் திட்டி ஓடித்திரிந்த மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் அடாவடித்தனம் இன்றைய தினம் மட்டக்களப்பு நகரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சர்ச்சைகளை ஏற்படுத்துவதில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சற்றும் இழைத்தவர் அல்ல நான் என்பதை சுமணரத்ன தேரர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
இன்றைய தினம் பொதுபலசேனா உள்ளிட்ட பௌத்த அமைப்புக்கள் பல மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த போது பாதுகாப்பு காரணம் கருதி வெலிகந்தை பகுதியில் வைத்து பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது.
இந்நிலையில் அங்கு கூடிய பிக்குகளும், பௌத்த மக்களும், முரண்படும் விதமாகவும், கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகவும் நடந்துகொண்டிருக்கின்றனர்.
பௌத்தத்தை முறையாகக் கற்ற பௌத்த மதகுருமார்கள் தங்கள் தர்மவழி மறந்து செயற்பட்ட விதத்தினை பல்வேறு புகைப்படங்களும் சாட்சியாக எழுந்து நிற்கின்றன.
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, சமூககங்களுக்கிடையில் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி செய்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டுக் கொண்டிருக்கின்றது.
ஒருபுறத்தில் அரசியல் தீர்வுத்திட்ட வரைபு நடந்து கொண்டிருப்பதாகவும், கூடிய விரைவில் அரசமைப்பிற்கான மாற்றம் வரும் என்றும் அரசாங்கம் தெரிவித்துக் கொண்டிருக்கின்றது.
இன்னொருபுறத்தில், அரசாங்கத்தை அந்த இலக்கை நோக்கி நகர்ந்து செல்லமுடியாமல் தடுப்பதில் குறியாக இன்னொரு தரப்பு மிகத்துள்ளியமாக செயற்பட்டுவருகின்றது.
இன்று பௌத்த பிக்குகள் மீது கை வைக்கமுடியா நிலையில் காவல்த்துறையின் நின்று கொண்டிருக்கின்றனர்.
ஏனெனில் நாட்டின் கௌரவத்திற்குரியவர்களாகிய பௌத்த பிக்குகள் மீது இராணுவத்தினரோ அன்றி, காவல்த்துறையினரோ தடியடி நடத்தினால், தென்னிலங்கை முழுவதும் இதன் தாக்கம் ஒரு நிமிடப்பொழுதில் நடந்தேறும் என்பதை வரலாறு கற்கொடுத்திருக்கிறது.
அரசாங்கத்திற்கு தலையிடியை கொடுக்கும் அஷ்திரமாகவே இப்பொழுது இனவாதம் கொண்ட பிக்குகளை அரசாங்கத்திற்கு எதிரான அந்தத் தரப்பு இறக்கிவிட்டிருக்கிறது.
இன்று, மட்டக்களப்பிற்குள் வரவிருந்த பிக்குகளை காவல்த்துறையினர் தடுத்தனர். ஆனால் அவர்களை உள்ளே விடாமல் தடுத்தால் தாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என பெரும்பான்மை இனத்தினைச் சேர்ந்தவர்கள் எச்சரிக்கைவிடுத்திருக்கிறார்கள்.
நாட்டில் யுத்தம் முடிந்த பின்னர், ஓரளவிற்கு அமைதி நிலவிவந்திருந்தது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருந்த போதிலும், வடக்கு கிழக்கில் விகாரைகள், சிங்களக் குடியேற்றங்கள் நடந்தபோதிலும் இதுபோன்ற நிலமை ஏற்பட்டிருந்ததில்லை.
ஆனால் மைத்திரிபால சிறிசேன ஆட்சி ஏற்றதன்பின்னர், தொல்லைகள், நெருக்கடிகள் கொடுக்க வேண்டும் என்பதன் நோக்கத்தினாலேயே இந்த முயற்சிகள், தூண்டுதல்கள் ஏற்படுத்தப்படுகின்றன என்கிறாரகள் தென்னிலங்கை ஆட்சியாளர்களும், பத்திரிகையாளர்களும்.
இவ்வாறான நிலையில், இந்தப் பிரச்சினைகளை அரசாங்கம், சாமர்த்தியமாக அடக்கவேண்டிய இக்கட்டான சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இதே நிலமை தொடர்ந்த நீடிக்குமாக இருந்தால் இன்னுமொரு 83ம் ஆண்டுக்கலவரம் வெடிப்பதற்கான சூழல் விரைந்து கொண்டிருக்கின்றது என்பது மட்டும் உண்மை. வரும்முன் காப்பது நல்லது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.