28 சட்டவிரோத மனைவிகள் - 25 வது மனைவியின் புகாரில் சிக்கினார் ஆசாமி


28 பெண்களை திருமணம் செய்ததோடு , 25 ஆவது மனைவியை வரதட்சணை கொடுமை படுத்திய நபரை அவரது 27ஆவது  மனைவியின் வீட்டில் வைத்து கைது செய்த சம்பவம் பங்களாதேஷில் பதிவாகியுள்ளது.


பங்களாதேஷின் பர்குணா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் கடந்த 2011ஆம் ஆண்டு யாசின் பியாபாரி என்பவரை திருமணம் செய்துள்ளார். குறித்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில், அவரது கணவருக்கு ஏற்கனவே பல திருமணங்கள் நடைபெற்றுள்ள விடயம் தெரியவந்துள்ளது.இந்நிலையில் தான் அதில் 25ஆவது மனைவி என்பதை புரிந்து கொண்ட அவர், கணவரின் ஏனைய மனைவிகளை கண்டுபிடிக்க  முயற்சியை செய்துள்ளார். அதில் 17 பேரின் முகவரிகளை கண்டுபிடித்து, கணவருக்கு பல குழந்தைகள் இருப்பதையும், எல்லா வீட்டிலும் தான் வெளியில் வேலை செய்வதற்காக, சென்றுள்ளதாக கூறிவந்துள்ளதை தெரிந்து கொண்டுள்ளார்.குறித்த பெண்ணை 25 ஆவது முறையாக திருமணம் செய்ததுடன் பியாபாரி,   வரதட்சணை கொடுமையும்  செய்துள்ளார். இந்நிலையில் குறித்த பெண் அளித்த முறைபாட்டின் பெயரில் சந்தேக நபரை அவரின் 27ஆவது மனைவியின் வீட்டில் வைத்து பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.