பெளத்த பிக்குகளாக மேலும் இரு முஸ்லிம் சிறுவர்கள்..?


எஸ். ஹமீத் 
பௌத்த பிக்குகளாவதற்காக  இரு முஸ்லீம் சிறுவர்கள் பௌத்த மடாலயத்தில் ஒப்படைக்கப்படவிருந்த நிலையில் பரோபகார முஸ்லீம் தனவந்தர்களினால் தடுத்துக் காப்பாற்றப்பட்டுள்ளனர். வெளிநாட்டுக்  கணவனால் கைவிடப்பட்டிருந்த இரத்மலானையைச் சேர்ந்த முஸ்லிம் பெண்மணி ஒருவர் தனது 12  மற்றும் 13  வயதுடைய பிள்ளைகளை வைத்துக் காப்பாற்ற முடியாத வறுமை நிலையில் அவர்களை பௌத்த மடாலயத்தில் சேர்ப்பிக்க நடவடிக்கையெடுத்துள்ளார்.

எனினும் இதுபற்றி அறிந்து கொண்ட இலங்கை மேமன் சமூகத்தைச் சேர்ந்த தனவந்தர்கள் சிலர் குறித்த தாயைத் தொடர்பு கொண்டு,  அச்சிறுவர்களைத்  தாமே பொறுப்பெடுத்து, ஆதரவற்றோர் நலம் பேணும் காப்பகத்தில் வைத்துப் பராமரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளமையினால் இரு சிறுவர்களும் பிக்குகளாக மாறுவதிலிருந்தும் தடுக்கப்பட்டுள்ளனர். அல்ஹம்து லில்லாஹ்!

ஏழு வயதான முஸ்லிம் சிறுவன் ஒருவன் அண்மையில் பௌத்த துறவியாக்கப்பட்டுள்ளமை வாசகர்கள் அறிந்ததே!

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.