நல்லாட்சிக்கு வித்திட்டவரை நல்லாட்சி அரசு இன்னும் கண்டுகொள்ள வில்லை

றிப்கான் கே சமான்

நல்லாட்சிக்கு வித்திட்டவரை இந்த நல்லாட்சி அரசு இன்று வரை  கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது  எனவே இந்த அரசுக்கு சிறந்த பாடம்புகட்டும் சந்தர்ப்பம் மு.கா விற்கு கிடைத்திருக்கிறது என ஊடகவியளாலரும் அகில இலங்கை சமாதான நீதவானுமான எம்.எச்.எம். அக்ரம் மத்திய கிழக்கு நாட்டிலிருந்து அறிக்கை வெளியிட்டுள்ளார்

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது, 
வன்னி மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பெரும் சரிவைச் சந்தித்துக் கொண்டும் மு.கா. ஆதரவாளர்கள் அரசியல்ரீதியாக அனாதைகளாக காலம் கடத்திக்கொண்டுமிருந்த இக்கால சூழலில்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான  ஹுனைஸ் பாறூக் மு.கா வில் இணைந்தது இக்கட்சிக்கு மேலும் வழுச்சேர்த்துள்ளதுடன்
கட்சித் தலைமை தேசியப்பட்டியல் தொடர்பானதொரு முடிவை அறிவித்திருப்பதும் வன்னி  மாவட்ட மு.கா ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தையும்,  புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

 வன்னி மாவட்டத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் இரண்டு வருடங்கள் தேசியப் பட்டியல் ஒன்றைத்  தருவதற்கு கட்சி தீர்மானம் எடுத்திருப்பதாக அண்மையில்  மன்னார் சிலாவத்துறையில் நடைபெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் மு.கா வில் இணையும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்  நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கள் அமைச்சருமான றவூப் ஹகீம் தெரிவித்திருந்தார்.

 அமைச்சரது இந்த கருத்து மக்கள் மத்தியில் குறிப்பாக வன்னி மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன்,  தேர்தல் காலங்களில் மு.கா அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை என்று குற்றம் சாட்டுவோருக்கு இது சிறந்த பதிலடியாகவும் அமைந்துள்ளது. 

தேசியப் பட்டியல் எம்.பி என்பது பாவ புண்ணிய ரீதியாகவோ  முகஸ்தூதிக்காகவோ வழங்கப்படுவதை விட கட்சியின் வளர்ச்சியையும்,  மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு சிறந்த சேவையைச் செய்யக்கூடிய ஒருவருக்கு வழங்கப்படுவதே சிறப்பான ஒன்று.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் இத்தேசியப் பட்டியலுக்கு தகுதியானவர் இவருக்கு வழங்கினால் வன்னியில் மு.கா மேலோங்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை, ஏனெனில்  இவர் கடந்து வந்த பாதை இவரது தகுதியை சான்று பகர்கிறது.

இவர் அரசாங்கத்தின் ஊடாகவும் தனியார் நிறுவனங்கள் ஊடாகவும் இன மத பேதமின்றி  மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட  மக்களுக்கு பல சேவைகளைச் செய்தவர். பல வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு குறிப்பாக இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்குச் சென்று அரச தரப்பு  அதிகாரிகளை சந்தித்து பேசியதுடன் அவர்களை இலங்கைக்கு அழைத்து வந்து வடக்கில் வாழும் சிறுபான்மை மக்களின் கஷ்டங்களை காண்பித்ததோடு அந்த நாட்டின் உதவிகளை பொற்றுத் தந்தவர் , 
கடந்த காலங்களில் உள்நாட்டிலும்,  வெளிநாட்டிலும் தான் இருந்த கட்சி தொடர்பாக மக்கள் மத்தியில் நற்பெயரை ஏற்படுத்தியதுடன் கட்சியின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர், குறுகிய காலத்தில் அதிக தடவை மீள்குடியேற்றம் தொடர்பில் பாராளுமன்றில் உரையாற்றியவரும் இவரே, 
இஸ்லாமிய மார்க்கம் தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர் பிழையான விளக்கம் அளித்தற்கு எதிராக கிழர்ந்தெழுந்து பாராளுமன்ற வரலாற்றில் முதற்தடவையாக ஹன்சாட்டிலிருந்தே அந்த கருத்தை நீக்குமாறு கூறியதுடன் இனி யாரும் தவறான விளக்கம் அளிக்க கூடாது எனவும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தவர்,
முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிக்கு  எதிராக பாராளுமன்றிலும் அதற்கு வெளியேயும் குரல் கொடுத்தவர் குறிப்பாக முஸ்லீம்களை அரசால் பாதுகாக்க முடியாவிட்டால் முஸ்லிம் இளைஞர்களின் கைகளில் சட்டரீதியான ஆயுதத்தை  தாருங்கள் எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்கிறோம் என்று பாராளுமன்றில் வீர முழக்கம் இட்டவரும் இவரே, இந்த நாட்டில் நல்லாட்சி அமைய வேண்டும் என்று இந்த மக்களுக்காக ஒரு பெரும் அரசாங்கத்தையே எதிர்த்து துணிச்சலாக கால்வைத்த முதல் முஸ்லிம்  சிறுபான்மை இன பாராளுமன்ற உறுப்பினர் என்றால் அதுவும் இவர்தான்,  இன்று நிலவும் நல்லாட்சிக்கு வித்திட்ட இவரை இந்த அரசு கண்டுகொள்ளாததால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இவரை மீண்டும் பாராளுமன்றம் அனுப்பி இந்த அரசுக்கு சிறந்த பாடம் புகட்ட வேண்டும்.  

எனவே அரசியலில் முதுமானி பட்டம், அரசியல் அனுபவம், சிறந்த ஆளுமை, பேச்சாற்றல் உள்ள  ஒருவர் சமூக சிந்தனையாளர்  என்றால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி  ஹுனைஸ் பாறூக் தான் மு.கா வின் தேசியப் பட்டியலுக்கு தகுதியானவர் என்றும் 
இதையே கட்சி ஆதரவாளர்களும் விரும்புகின்றனர்.   இது விடயத்தில்  கட்சி சிறந்த முடிவை எடுக்கும் என தான் நம்புவதாகவும் அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.