கனடாவிலிருந்து 1750 பேரை கடத்திய இலங்கையர் - அமெரிக்காவின் FBI அதிகாரிகளால் கைது

அமெரிக்காவினால் சிறைச்சாலையில் தடுத்து வைத்துள்ள ஸ்ரீகஜமுகன் செல்லையா என்ற இலங்கையர் வருத்தத்தில் உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர் Natchez பகுதியில் உள்ள Adams County சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இலங்கையை பூர்வீகமான கொண்ட 51 வயதுடைய கனேடிய பிரஜையான ஸ்ரீகஜமுகன் செல்லையா, அமெரிக்க FBI அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனக்கு அங்கு நீதி கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செல்லையா தொடர்பில் எழுதப்பட்ட மனுவில் அவர் கிட்டத்தட்ட 1750 நபர்களை அமெரிக்காவுக்கு கடத்தியுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.. அவர்களில் பலர் கனடா நாட்டை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.
“கனடா ஒரு சிறந்த இடம்” என செல்லையா அமெரிக்க அதிகாரிகளிடம் விளக்கியுள்ளார்.
ஹெய்டி, பஹாமாஸ் மற்றும் தெற்கு புளோரிடாவுக்கு வான் மற்றும் கடல் மூலம் குடியேற்றப்படும் நபர்களை கடத்தும் போது ஒரு தலைக்கு கிட்டத்தட்ட 55 ஆயிரம் அமெரிக்க டொலர் இலாபத்தை பெறுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
“எனக்கு யாரும் அந்த பணத்தை செலுத்தவில்லை, அமெரிக்க மக்கள் எங்கிருந்து இந்த தகவல்களை பெற்றார்கள் என எனக்கு தெரியவில்லை.. என செல்லையா ஒரு பத்திரிகை நிருபருக்கு சிறையில் இருந்துவாறு தெரிவித்துள்ளார்.
மனித கடத்தல் ஊடாக பெற்ற இலாபத்தை அவர் மறுத்துள்ளார். தான் குறைந்த பட்சம் ஒரு டொலரேனும் சம்பாதிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் தஞ்சம் கோருவோர் ஆட்கடத்தப்பட்டமைக்கான ஆதரங்கள் உள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ரால்ப் Goodale தெரிவித்துள்ளார்.
அது மிகவும் ஆபத்தான விடயம் என அவர் கவலை வெளியிட்டுள்ளார். "இந்த நேரத்தில், உண்மையை நிரூபிப்பதற்கு எந்தவொரு உறுதியான சான்றும் இல்லை, ஆனால் சில தடயங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
"புகலிடம் கோருவோர் சில கடிதங்கள் மூலம் ஏதோ மேற்கொள்கின்றார்கள், உதாரணமாக, திட்டமிடல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது கடந்த சில மாதங்களாக இந்த நடவடிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் செல்லையா தொலைப்பேசி அழைப்பின் ஊடாக அந்த பத்திரிகை நிரூபரிடம் தனது நிலையை விளக்கியுள்ளார்,
“நான் கனடாவில் வாழ்கின்றேன். எனினும் நான் பல நேரங்களில் உள்நாட்டிலும், பல நேரங்களில் வெளிநாட்டிலும் தங்கியுள்ளேன். எனினும் நான் கனடா குடியுரிமை பெற்றவன். எனது குடும்பம், எனது மனைவி, எனது பெற்றோர் மற்றும் ஏனையோர் கனடாவிலேயே வாழ்கின்றனர். நான் இலங்கை பூர்வீகத்தை கொண்டவன்.
மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் அவர் மாண்ட்ரீல் நகரில் கல்வி கற்றுள்ளார். 1989ஆம் ஆண்டு தான் கனடாவில் குடியுரிமை பெற்றதாக செல்லையா குறிப்பிட்டுள்ளார். எனினும் அவரது வாழ்க்கை என்ன மாதிரியானது என தெளிவாக தெரியவில்லை. எனினும் அவர் தனது வரிப்பணத்தை செலுத்துவதற்கு தவறியுள்ளார்.
2007ஆம் ஆண்டு செல்லையா மீது கனடா வருமானவரி ஏஜென்ஸியினால் 75625 டொலர்கள் மற்றும் வரியினை செலுத்துமாறு பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.