பாதால உலகம் தலைதூக்கியுள்ளது, எனது உயிருக்கும் ஆபத்து- ஞானசார தேரர்

கையில் விலங்கு மாட்டியுள்ள சந்தேகநபர்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியாத இந்த அரசாங்கம், எப்படி நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தும் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லையென ஊடகங்களின் முன்னாள் எவ்வளவுதான் பெருமையடித்தாலும், அதன் உண்மை நிலைமை என்னவென்பது தற்பொழுது முழு நாட்டுக்கும் தெரியவந்துள்ளதாகவும் ஞானசாரர் கூறியுள்ளார்.
தற்பொழுது நாட்டை ஆட்சி செய்வது நல்லாட்சி அரசாங்கமா? அல்லது பாதால உலக குழுக்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி நடந்த காலங்களிலெல்லாம், பாதால உலக குழுக்களின் கரம் ஓங்கி இருந்துள்ளது. இதுதான் தற்பொழுதும் நடைபெற்றுள்ளது. பாதால உலக குழுக்கள் தலைதூக்குவது தேசிய அமைப்புக்களுக்கும் பாரிய அச்சுறுத்தல் எனவும், அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் எம்மைப் போன்றவர்களை கொலை செய்வதற்கும் பாதால உலக குழுக்களுடன் கொந்தராத்து (ஒப்பந்தம்) ஒன்று செய்யப்படுவதற்கு முடியாத ஒன்று அல்ல எனவும் ஞானசார தேரர் இன்றைய சகோதர தேசிய நாளிழொன்றுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். 

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.