கொழும்பு பல்கலையில் மோதல்; நால்வர் காயம்,மாணவர்களுக்கு தடை

கொழும்பு பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து கலைப்பீடத்தைச் சேர்ந்த சில மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கலைப்பீடத்தைச் சேர்ந்த இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்கள் சிலருக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பீடாதிபதி கலாநிதி அத்துல ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆனந்த ராஜகருணா மாவத்தையில் உள்ள மாணவர் விடுதியில் நேற்றைய தினம் இரவு இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் இடம்பெற்றுள்ளது.
இந்த மோதலில் காயமடைந்த நால்வர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
மோதலையடுத்து அங்கு ஏற்பட்ட பதற்றத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். இதனையடுத்து ஆண்கள் விடுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.