என்­னி­ட­மி­ருந்து முஸ்­லிம்­களை நிரந்­த­ர­மாக பிரிப்­ப­தற்கு வெளிநாட்டு சக்­திகள் சதி – மஹிந்த

என்­னி­ட­மி­ருந்து முஸ்­லிம்­களை நிரந்­த­ர­மாக பிரிப்­ப­தற்கு வெளிநாட்டு சக்­திகள் சதி செய்­கின்­றன என தெரி­வித்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ, இந்த
சூழ்ச்­சி­களில் சிக்கி பலி­யாக வேண்டாம் எனவும் முஸ்­லிம்­களிடம் வேண்­டுகோள் விடுத்தார்.
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ­வுக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம் பிர­தி­நி­திகள் சில­ருக்­கு­மி­டை­யே­யான சந்­திப்­பொன்று புதன்கிழமை மாலை கொழும்பிலுள்ள மஹிந்­தவின் இல்­லத்தில் இடம்­பெற்­றது.
இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
எனது ஆட்­சிக்­கா­லத்தில் முஸ்­லிம்­களின் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் அவர்­க­ளுக்­கான சகல
உத­வி­களும் வழங்­கப்­பட்­டன. இதனை எவ­ராலும் மறுக்க முடி­யாது.
நான் வடக்கு கிழக்கில் பல பள்­ளி­களை புன­ர­மைத்­தி­ருக்­கிறேன். அத்­துடன் நாட்டில் புதி­தாக 4 பள்­ளி­களை
நிர்­மா­ணித்துக் கொடுத்­தி­ருக்­கிறேன்.
இவ்­வா­றா­ன­தெரு நிலையில் இன்று முஸ்­லிம்­களை என்­னி­ட­மி­ருந்து நிரந்­த­ர­மாக பிரப்­ப­தற்கு வெ ளிநாட்டு சக்­திகள் சதித்­திட்­டங்­களை தீட்­டு­கின்­றன. அதற்­காக பெரு­ம­ளவில் நிதி ஒதுக்­கப்­ப­டு­கின்­றது.
முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­படும் இந்த சூழ்ச்­சிக்கு யாரும் பலி­யா­கி­வி­டக்­கூ­டாது. அவர்கள் இந்த
சூழ்ச்­சி­யி­லி­ருந்து தங்­களை பாது­காத்­துக்­கொள்ள வேண்டும்.
அத்­துடன் எனது ஆட்­சியில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக எந்த செயற்­பா­டு­களும் இடம்­பெ­ற­வில்லை என உறு­தி­யாக கூறிக்­கொள்ள விரும்­பு­கிறேன் என்றார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.