காத்தாண்குடி கைக்கலப்பு & திருகோணமலை மாவட்ட டெங்கு தாக்குதல் பற்றி SLTJ ஊடகவியலாளர் சந்திப்பு (Video)

இவ்வாண்டின் ஆரம்பத்துடன் இலங்கை முழுவதும் டெங்கு நோயின் தாக்கம் வீரியமடைந்துள்ளதை காண முடிகிறது. குறிப்பாக திருகோணமலை மாவட்டமானது டெங்கால் பொிதும் பாதிக்கப்பட்டுள்ள பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் வரைக்கும் 12 மரணங்கள் சம்பவித்துள்ளதுடன் 15 நபா்கள் ஆபத்தான நிலையில் உள்ளனா். சுமார் 2,000 நபா்கள் இதுவரை டெங்கு தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனா். மருத்துவ மனைகளில் போதிய சிகிச்சையின்றி நோயாளிகள் அங்கலாய்க்கின்றனா். இரத்த பாிசோதனைக் கூடங்களில் மக்கள் திரளாகக் குழுமி பல மணி நேரங்கள் காத்திருக்கின்ற அவலம் நீடிக்கிறது. பரவிக்கொண்டிருப்பது டெங்கா அல்லது வேறு ஏதும் வைரஸ் தாக்கங்களா? என்ற பீதி மக்களை மனதளவில் ஆட்டங்கான வைத்துள்ளது.
கிண்ணியாவில் தற்போதைய நிலைமையை கருத்தில் எடுத்து அனா்த்த நிலைமையை அரசு உடனடியாக பிரகடனப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை வைக்கிறது. அத்துடன் இனிவரும் காலங்களிலும் இந்நோயின் தாக்கத்திலிருந்து கிண்ணிய மக்களை காப்பதை இலக்காக வைத்து “டெங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவு” கிண்ணியாவில் நிறுவப்படல் வேண்டும்.
மேலும், அனா்த்த நிலைமைகளை எதிர்கொள்ளும் விதத்தில் கிண்ணியாவின் மருத்துவ மனைகள் சகல வசதிகளுடன் கூடியதாக நவீனமயப்படுத்தப்படல் வேண்டும்.
அத்தோடு, பாதிக்கப்பட்டவா்களுக்கும், பலியானவா்களுக்கும் இழப்பீட்டுத் தொகையினை அரசு உடனடியாக வழங்கல் வேண்டும். மேலும், அனா்த்த நிலைமையினை சமாளிக்கும் விதத்தில் மேலதிக வைத்தியா்கள், தாதிமார்கள், இரத்தப்பாpசோதகா்கள் உள்ளடங்கிய குழுவினை அரசு உடனடியாக கிண்ணியாவுக்கு அனுப்பி வைத்தல் வேண்டும். அத்துடன், முப்படையினரையும் களத்தில் இறக்கி சிரமதானப் பணிகளில் தீவிரமாக ஈடுபடச் செய்தல் வேண்டும். இக்கோரிக்கைகளை இவ்வுவூடாக அறிக்கை ஊடாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அரசிடம் விடுத்துக் கொள்கிறது.
அத்துடன், கடந்த 10.03.2017 அன்று காத்தான் குடியில் இரு குழுவினருக்கு மத்தியில் கைக்கலப்பு ஒன்று எற்பட்டது. இரும்பாயுதங்கள் மற்றும் கல்வீச்சுக்களுடன் கைக்கலப்பில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கண்டிப்பதுடன், எந்நிலையிலும் ஆயுதங்கள் ஏந்தி வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை அரசு எடுக்க வேண்டும் என்பதையும் பதிவு செய்து கொள்கின்றோம்.

அத்துடன் கருத்தை கருத்தால் எதிர் கொள்வதே ஆரோக்கியமான அனுகுமுறை என்பதுவே ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆணித்தரமான நிலைப்பாடுமாகும்.
மேலும், மேற்படி சம்பவத்தை ஒட்டி ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் கைக்கலப்பில் ஈடுபட்ட குழுக்களுக்குமிடையே முடிச்சுப் போட முனைவதையும், அவ்வாறு பரப்பப்படும் அவதூறுகளையும் ஜமாஅத் முற்றாக மறுதலிக்கின்றது.
அத்தோடு, குறிப்பிட்ட நிகழ்வுடன் தொடா்புபடுத்தி இலங்கையிலுள்ள தவ்ஹீத் வாதிகள் அனைவரும் ISIS ஆதரவாளா்கள் என்றும், முஸ்லிம்கள் என்றாலே அவா்கள் ISIS ஆதாிப்பவா்கள் தான் என்ற மாயை தோற்றமும் ஊடகங்கள் வாயிலாக பரப்பப்பட்டு வருகின்றன.
இப்போலியான விமா்சனத்தையும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கண்டிப்பதுடன், ISIS என்பவா்கள் தடைசெய்யப்பட வேண்டிய அமைப்பினா், அவா்களது செயற்பாட்டுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடா்பும் இல்லை என்பதையும் தெளிவாக குறிப்பிடுவதோடு, ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் இது போன்ற தீவிரவாத கும்பல்களை ஒருபோதும் ஆதரிப்பவா்கள் இல்லை என்பதையும் பதிவு செய்து கொள்கின்றோம்.
இலங்கையில் ISIS தீவிரவாத செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டவா்கள் இருப்பின் சட்டத்தின் படி அவா்களுக்கு நடவடிக்கை எடுக்குமாறும் அரசை ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.
மேலும், இது போன்ற கைக்கலப்புகளுக்கு அடிப்படைக் காரணம் ஒருவரது கருத்துச் சுதந்திரத்தை பிரிதொரு சாரார் பறிக்க முனைவது தான். ஓர் அமைப்பினா் போலிஸ் அனுமதி பெற்று, சட்ட ரிதியான முறையில் பெற்ற அனுமதியை வைத்து, இந்நாட்டின் அரசியல் யாப்பு வழங்கியுள்ள கருத்துாிமையை பயன்படுத்தி ஒரு நிகழ்ச்சியை நடாத்தும் போது அதனை அராஜக வழியில் ஒரு சாரார் தடுக்கும் போதே பிரச்சினை எழுகிறது.
இங்கு நிகழ்ச்சியை நடாத்துபவா்களை காவல் துறை தடுத்து, அவா்களின் கருத்துரிமையை பாதிக்காது, அராஜகம் புரிந்த கும்பலை தடுத்து, அவா்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவதே நீதியான முறையாகும். இந்நிலை கடைபிடிக்கப்படாமை தான் கைகலப்புகள் எழுவதற்கு அடிப்படை காரணம் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.
மேற்படி நிகழ்வையொட்டி காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளனம், ஜம்இய்யதுல் உலமா, மற்றும் அதிகாாிகள் உள்ளடங்களாக பலா் ஒன்றிணைந்து ‘இதன் பிறகு பொது இடங்களிலோ, வீதிகளிலோ எவ்வித நிகழ்ச்சிகளையும் செய்யக் கூடாது என்றும், ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது’ என்றும் தீர்மானம் எடுத்துள்ளதாக அறிக்கை விட்டுள்ளனா்.
சம்மேளனத்தின் இத்தீர்மானத்தை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது. அத்துடன், இத்தீர்மானமானது இலங்கை அரசியல் யாப்பு தந்துள்ள கருத்துத் தொிவிக்கும் உரிமைக்கு எதிரான சட்டத்துக்குப் புறம்பான தீர்மானம் என்பதையும் தொிவித்துக் கொள்வதோடு, கருத்துச் சுதந்திரத்துக்கு இடமளித்து, காடைத்தனம் புரிபவா்களை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவது ஒன்றே தீர்வே தவிர யாருமே கருத்தே சொல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற தீர்மானம் பிரச்சினையை தீர்ப்பதற்கு வழிமுறையல்ல என்பதையும் அறிவித்துக் கொள்கிறது.
இப்படிக்கு,
A.K..ஹிஷாம் M.I.Sc
செயலாளர்
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.