ஒளிப்படப் போட்டியில் புத்தளம் பர்ஹான் தேசிய மட்டத்தில் முதலிடம்

YSF (Young Star Foundation) இளம் நட்சத்திர அறக்கட்டளை ஏற்பாட்டில் நடைபெற்ற தேசிய ரீதியான விருது வழங்கும் விழா 2017 இன், ஒளிப்படப் போட்டியின் முதலாம் இடத்தை புத்தளம், புழுதிவயலைச் சேர்ந்த எம்.என்.எம். பர்ஹான் பெற்றுக்கொண்டார்.
தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல், அரச கரும மொழி அமைச்சர் மனோ கணேசன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இவ் விருது வழங்கும் விழா இன்று (ஏப்ரல் 09) கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.

முதலாம் பரிசு பெற்ற பர்ஹான், "பரிசுக்காக தெரிவுசெய்யப்பட்ட 25 பேரில் இடம்பெற்றிருந்தேன். அதுகூட வெற்றியாகத்தான் தெரிந்தது. முதலாம் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. இந்த விருது எனக்கு சந்தோஷத்தையும் ஊக்கத்தையும் தருகின்றது" எனக் கூறிய அவர், 'என்னுடன் மனைவியும் இருந்ததால் சந்தோஷம் இரட்டிப்பானது' என்றும் கூறினார்.

தனது ஊரில் (புழுதிவயல்) FinePix Studio வின் உரிமையாளரான பர்ஹான், வீடியோ படப்பிடிப்பு, எடிட்டிங், குறுந்திரைப்படம் இயக்கம் ஆகியவற்றிலும் ஈடுபாட்டுடன் பங்களிப்பு செய்துவருகின்றார்.

எதிர்வரும் காலங்களிலும், சகோ. எம்.என்.எம். பர்ஹான் வெற்றி மேல் வெற்றி பெற வேண்டுமென Photon Art Club மனமாற வாழ்த்துகின்றது.Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.