அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக அதிகரிப்பு

வௌ்ளம், மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது.
அனர்த்த நிலைமையினால் 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
194 பேர் உயிரிழந்துள்ளதுடன், 99 பேர் காணாமற்போயுள்ளனர்.
112 பேர் காயமடைந்துள்ளதுடன், 83 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
அவர்கள் பாதுகாப்பான 383 இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும், 6 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
1402 வீடுகள் முழுமையாகவும், 7 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.