ஞான­சார தேரர் எங்கே?

(விடிவெள்ளி பத்திரிகையில் வெளியான கட்டுரை )

பொது பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை கைது செய்­வ­தற்­கான சகல நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும் அதற்­காக நான்கு விசேட பொலிஸ் குழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் திணைக்­களம் கடந்த 25.05.2017 அன்று வெளி­யிட்ட உத்­தி­யோ­க­பூர்வ ஊடக அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

பொலிசாரின் கடமை­களுக்கு இடையூறு விளை­வித்­தமை, இனங்­களுக்கிடை­யி­லான ஒற்­று­மையை சீர்கு-­லைக்க முயற்­சித்­தமை,  வாக்­கு­மூலம் பெறு­வதற்­காக பொலிசார் விடுத்த அழைப்பை புறக்கணித்­தமை உள்-­ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழேயே தேரரைக் கைது செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டுள்­ள­தாக பொலிசார் தெரி­வித்­தி­ருந்­தனர்.

எனினும் இவ்­வாறு அறி­விக்­கப்­பட்டு இன்­றுடன் 7 நாட்­க­ளா­கின்ற போதிலும் ஞான­சார தேரரை பொலிசார் கைது செய்­ய­வில்லை.

தமது அமைப்பின் செய­லா­ள­ரான குறித்த தேரரின் உயி­ருக்கு அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் அதனால் அவர் தலை­ம­றை­வாக வாழ்ந்து வரு­வ­தா­கவும் அவ்­வ­மைப்பு அறி­வித்­தி­ருந்­தது.

இருப்­பினும் ஞான­சார தேரர் தற்­போது பகி­ரங்­க­மாக ஊட­கங்கள் மூலம் தனது கருத்­துக்­களை முன்­வைக்க ஆரம்­பித்­துள்ளார். பொதுபல சேனா அமைப்பின் முகநூல் மூல­மாக சில தினங்­க­ளுக்கு முன்னர் ஒலிப்­ப­தி­வொன்றை அவர் வெளி­யிட்­டுள்ளார். மேலும் கொழும்­பி­லி­ருந்து வெளி­யாகும் ஆங்­கில வார இத­ழொன்­றுக்கு பேட்டி ஒன்­றையும் வழங்­கி­யுள்ளார்.

அப்­ப­டி­யானால் ஞான­சார தேரர் எங்­கி­ருக்­கிறார் என்­பதை இன்­னுமா பொலிசார் அறி­யா­ம­லி­ருக்­கி­றார்கள்? நிய­மிக்­கப்­பட்ட நான்கு விசேட பொலிஸ் குழுக்­களும் இன்­ன­முமா தமது தேடுதல் வேட்­டையை நடத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள்? அல்­லது இவர்கள் அனை­வ­ரி­னாலும் கண்­டு­பி­டிக்க முடி­யாத மறை­வி­டத்­திலா ஞான­சார தேரர் இருந்து கொண்­டி­ருக்­கிறார்?

ஞான­சார தேரரை அர­சாங்­கத்­தி­லுள்ள அமைச்­சர்கள் ஒரு சிலரே பாது­காத்து வைத்­துள்­ள­தாக பர­வ­லாக குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. அப்­ப­டி­யானால் இந்த அமைச்­சர்­களின் அழுத்­தங்­க­ளால்­தானா தேரர் இன்னும் கைது செய்­யப்­ப­டா­ம­லுள்ளார்? இந்தக் கேள்­வி­க­ளுக்கு விடை தரப்­போ­வது யார்?

நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கில் தேரர் கடந்த 24ஆம் திகதி ஆஜ­ரா­க­வில்லை. காய்ச்சல் என இதற்கு காரணம் சொல்­லப்­பட்­டது. இன்­றைய தினம் குறித்த வழக்கு மீண்டும் விசா­ர­ணைக்கு வர­வுள்­ளது. இதில் அவர் ஆஜ­ரா­வாரா இன்றேல் காரணம் சொல்லித் தப்­பிக்க முனை­வாரா என்­ப­தையும் பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்டும்.

இப்­போது சிவில் உரிமை செயற்­பாட்­டா­ளர்கள் எழுப்­பு­கின்ற கேள்வி, ஞான­சார தேரர் நாட்டின் சட்­டத்­திற்கு உட்­பட்­ட­வரா அல்­லது அப்­பாற்­பட்­ட­வரா என்­ப­தே­யாகும். இந்தக் கேள்­விக்கு பதில் சொல்ல வேண்­டி­யது அர­சாங்­கத்­தி­னதும் நீதி­ய­மைச்­ச­ரி­னதும் கடப்­பா­டாகும்.

நாட்டில் அனர்த்த சூழல் ஏற்­பட்­டுள்­ளது என்பதற்காக ஞானசார தேரரின் விடயத்தை கிடப்பில் போடவோ, மறக்கடிக்கச் செய்யவோ முனையக் கூடாது.

அவரது செயற்பாடுகள் தொடர இடமளிக்கப்படுமாயின் அதுவே மற்றுமொரு அனர்த்தத்திற்கு வழிவகுக்கும்.

எனவேதான் பொலிசார் வாக்குறுதியளித்தபடி ஞானசார தேரரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.