எனர்ஜி ட்ரிங்க் கொடுத்து.. இளைஞரை 3 நாட்கள் கூட்டுப் பலாத்காரம் செய்த 3 பெண்கள்

தென் ஆப்பிரிக்காவில் 23 வயது இளைஞரை 3 பெண்கள் வெறும் எனர்ஜி ட்ரிங்க் மட்டுமே கொடுத்து 3 நாட்கள் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவில் இளைஞர் ஒருவரை 3 பெண்கள் சேர்ந்து வெறித்தனமாக கூட்டு பலாத்காரம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரிட்டோரியா நகரத்தின் கிழக்கு பகுதியில் 15 பேர் பயணம் செய்யும் டாக்ஸியில் தனது வீட்டுக்கு செல்வதற்காக இளைஞர் ஒருவர் ஏறியுள்ளார். டாக்ஸியில் ஏறிய உடனேயே அந்த இளைஞருக்கு வலுக்கட்டாயமாக மயக்க ஊசி போடப்பட்டுள்ளது.
அந்த இளைஞர் மயக்கம் தெளிந்து பார்த்தபோது, அடையாளம் தெரியாத தனி அறையில் ஒரு படுக்கையில் இருந்துள்ளார். மயக்கம் தெளிந்த இளைஞருக்கு 3 பெண்கள் சேர்ந்து எனர்ஜி ட்ரிங்க் மட்டும் கொடுத்துள்ளனர்.
பின்னர் 3 பெண்களும் மாறி மாறி அந்த இளைஞரை பலாத்காரம் செய்துள்ளனர். தொடர்ந்து மூன்று நாட்கள் அந்த இளைஞரை தூக்க விடாமல் வெறும் எனர்ஜி ட்ரிங்க்கை மட்டுமே கொடுத்து 3 பெண்களும் கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர்.
மூன்று நாட்களுக்கு பிறகு அந்த இளைஞரை ஆளில்லாத இடத்தில் அரை நிர்வாணமாக விட்டுச் சென்றுவிட்டனர். அந்த இளைஞரை தூங்க விடாமல் தொடர்ந்து பலாத்காரம் செய்ததாலும் வெறும் எனர்ஜி ட்ரிங்க் மட்டுமே குடிக்கக் கொடுத்ததாலும் அந்த இளைஞரின் உடல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார், சம்பந்தப்பட்ட 3 பெண்களையும் தேடி வருகின்றனர். குற்றவாளிகள் 3 பேருக்கும் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என்று தென் ஆப்பிரிக்க காவல்துறை தெரிவித்துள்ளது.
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.