ரோஹின்கியா முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலை; விசாரணை குழுவில் ராதிகா குமாரசுவாமி

மியன்மாரின் ரஹீன் மாநிலத்தில் ரோஹின்கியா முஸ்லிம்களுக்கு எதிராக அரச படைகளால் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் படுகொலைகள் பாலியல் வல்லுறவுகள் மற்றும் சித்திரவதைகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் குழுவில் இலங்கைய சேர்ந்த ராதிகா குமாரஸ்வாமியும் பெயரிடப்பட்டுள்ளார்.
இந்திய உச்ச நீதிமன்ற சட்டத்தரணி இந்திரா ஜெய்சிங் இந்தக்குழுவிற்கு தலைமை தாங்குவார் என ஐநா அறிவித்துள்ளது
மூவர் அடங்கிய இந்தக்குழுவில் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் கற்ற இலங்கைய சேர்ந்த ராதிகா குமாரசுவாமி மற்றும் அவுஸ்திரேலியவை சேர்ந்த கிறிஸ்டோபர் டொமினிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
எல்லையோர சோதனைச் சாவடிகளின் மீது ரோஹின்கியா கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 9 படையினர் கொல்லப்பட்டதையடுத்து கடந்த ஒக்டோபரில்  ஆரம்பித்த பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக சுமார் 75,000 ஆயிரம் ரோஹின்கியா முஸ்லிம்கள் ரஹீன் மாநிலத்தில் இருந்து பங்களாதேஷிற்குள் அகதிகளாக இடம்பெயர நேரிட்டது.
ரோஹின்கியா முஸ்லிம் அகதிகளுடன் நடத்திய நேர்காணல்களை அடிப்படையாகக்கொண்டு கடந்த பெப்ரவரியில் வெளியிடப்பட்ட ஐநா அறிக்கையில் மியன்மார் பாதுகாப்பு படையினர் பாரிய மனிதப் படுகொலைகளை இழைத்ததாகவும் கூட்டுப் பாலியல் பலாத்காரங்களைப் புரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை மனித குலத்திற்கு எதிரான குற்றங்களெனவும் இனச்சுத்திகரிப்பாகவும் அமையலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த மார்ச் மாதத்தில் விசாணைக் குழுவொன்றை அமைப்பதற்கான ஐநா தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தால் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரளித்திருந்ததுடன் குற்றமிழைத்தவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்பட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நீதிகிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
மியன்மார் சிவிலியன் அரசாங்கத்தின் நிழல் தலைவரும் வெளிவிவகார அமைச்சருமான ஆங்ஸான் சூகி தாம் முன்னாள் ஐநா பொதுச் செயலாளர் கொபி அனான் தலைமையிலான ஆலோசனைக்குழுவின் பரிந்துரைகளை மட்டுமே ஏற்பேன் எனவும் ஏனைய நடவடிக்கைகள் சமூகங்களுக்கிடையில் பிரிவினையை உண்டுபண்ணும் எனவும் தெரிவித்திருந்தார்
இந்த நகர்வுகளை மியன்மார் இராஜதந்திரிகள் நிராகரித்ததுடன் இது ஏற்றுக்கொள்ள முடியாததொன்று எனவும் களநிலைக்கும் தேசிய சூழ்நிலைக்கும் பொறுத்தமைற்றது என கூறியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.