மண் சரிவில் மகள்மாயம் - நினைத்து நினைத்து உயிரை விட்ட தந்தை

அண்மையில் ஏற்பட்ட பேரனர்த்தம் காரணமாக 200 பேர் வரையில் உயிரிழந்தும் நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில் மண்சரிவில் காணாமல் போன மகளை காணாமையால் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.
காணாமல் போன மகள் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் காத்திருந்த E.W. குணரத்னம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
எஹேலியகொட பகுதியை சேர்ந்த இவர், மகள் காணாமல் போன காலப்பகுதியில் எந்தவித உணவும் உட்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் மகளான நிரோஷா சாமினி என்ற 22 வயது பெண், மண் சரிவில் சிக்கிய போதிலும் இதுவரையில் அவரது சடலத்தை கண்டுபிடிக்கவில்லை.


நோயினால் பாதிக்கப்பட்டிருந்த தந்தையிடம் இது தொடர்பிலான தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன. எனினும் அவர் உண்மையை அறிந்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து உணவு, நீர் இன்றி மகளுக்காக காத்திருந்த நிலையில் நேற்று காலை அவர் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

.


Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.