Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

UPDATE....ஞானசார தேரர் இன்றும் நீதிமன்றில் ஆஜராகவில்லை

Published on Wednesday, May 31, 2017 | 10:56 AM

நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கு குறித்து பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேர­ருக்கு எதி­ரான வழக்கு இன்­றைய தினம் இடம்­பெ­ற­வுள்­ளது.

கடந்த 24 ஆம் திகதி அவ­ருக்­கான அழைப்­பாணை விடுக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் அவர் கடும் காய்ச்சல் கார­ண­மாக வர முடி­யாது என அறி­வித்­தி­ருந்தார்.

‍இந்­நி­லையில் வைத்­திய அறிக்­கை­யுடன் இன்­றைய தினம் நீதி­மன்றில் ஆஜ­ரா­கு­மாறு நீதி­பதி மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி ரோஹினி வல்­கம, எஸ். துரை­ராஜா உத்­த­ர­விட்­டி­ருந்­தனர்.

குறித்த  உத்­தர்­வுக்கு அமை­வாக இன்று ஞாண­சார தேரர் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் நீதி­ப­தி­க­ளான பிரீத்தி பத்மன் சுர­சேன, எல்.டி.பி. தெஹி­தெ­னிய ஆகிய இருவர் கொன்ட குழு முன்­னி­லையில் ஆஜ­ராவார் என எதிர்ப்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இத­னூ­டாக கடந்த 25 ஆம் திகதி வியாழக் கிழமை முதல் தலை­ம­றைவு வாழக்கை வாழந்து வரும் கல­கொட அத்தே ஞான­சார தேரரின் தலை­ம­றைவு வாழக்கை முடி­வுக்கு வரும் எனவும் எதிர்ப்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­ன­லி­கொட காணாமல் ஆக்­கப்­பட்­டமை குறித்த வழக்கு நீதி­மன்­றத்தில் நடந்த போது,  ஞான­சார தேரர் ஹோமா­கம நீதிவான் நீதி­மன்­றுக்குள் அத்து மீரி­யி­ருந்தார்.

இதன் போது நீதி­மன்ற வளா­கத்தில் வைத்து பிரசாத் எக்னலிகொடவின் மனைவியை அச்சுறுத்தியதாக ஞானசார தேரர் மீது பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved