தெற்கில் வெள்ளம் - வடக்கில் கடும் வறட்சி : இலங்கையின் விநோத காலநிலை

நாட்டின் ஒரு பகுதி மக்கள் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வட மாகாணத்தில் பல பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காலி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் கடும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அனர்த்தங்கள் பதிவாகியுள்ள நிலையில், வட மாகாணத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாட்டங்களில் பயிர் செய்கைக்குப் போதுமான மழை வீழ்ச்சி கடந்த சில மாதங்களாக கிடைக்காமையினால் வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணிமுறிப்பு, விஸ்வமடு, மாந்தை கிழக்கு, துணுக்காய், மல்லாவி உள்ளிட்ட சில பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் பயிர் செய்கைக்கு போதுமான நீ்ர் கிடைக்காமையினால் வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளதுடன், தோட்டப் பயிர் செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணி, செட்டிக்குளம் மற்றும் சிதம்பரபுரம் உள்ளிட்ட சில பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த மருக்காரம்பளை பகுதி விவசாயிகளும் வறட்சியினால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.