இலங்கையில் பேஸ்புக்கில் விற்பனையாகும் பெண்கள்

பேஸ்புக் ஊடாக பல பெண்களின் அந்தரங்க விடயங்களை வெளியிடப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் “பெண்கள் விற்பனைக்கு உண்டு” என பேஸ்புக் பக்கம் ஒன்று செயற்படுத்தப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த பக்கத்தில் அனுமதியின்றி பெண்களின் புகைபடங்கள் பகிரப்பட்டு பலர் ஏமாற்றப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேஸ்புக் மற்றும் தனிப்பட்ட ரீதியில் பெற்றுக் கொள்ளப்பட்ட பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் இந்த பக்கத்தில் பகிரப்படுகிறது. அத்துடன் அவர்களை பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் பெண்களாக அடையாளப்படுத்தப்படுவதுடன், அவர்களின் தொலைப்பேசி இலக்கங்களும் பகிரப்படுகின்றன.

பல்வேறு நபர்கள் இந்த தொலைப்பேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துவதால் குறித்த பெண்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பேஸ்புக் பக்கம் தொடரில் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.