Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

மசாஜ் நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழில் : பல பெண்கள் கைது

Published on Saturday, May 6, 2017 | 7:22 AM

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த பாலியல் தொழில் நிலையம் ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
மிரிஹான ஊழல் ஒழிப்பு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்புஇடம்பெற்றுள்ளது.
இதில் பாலியல் தொழில் நிலைய முகாமையாளரான முன்னாள் இராணுவ வீரர் ஒருவரும் 7 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையத்தில் உள்நுழைவதற்காக ரூபாய் 2 ஆயிரம் அறவிடப்பட்டுள்ளதுடன், பெண்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள பெண்கள், குருநாகல், காலி, இரத்மலானை, நீர்கொழும்பு மற்றும் மாத்தறை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த மசாஜ் நிலையமான பாலியல் தொழில் நிலையம், இரண்டு மாடி கொண்ட சொகுசு கட்டடத்தில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மாதாந்த வாடகை அடிப்படையில் பெறப்பட்டு நடத்திச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved