முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது நடத்தப்புடும் தாக்குதல்களை அரசு கண்டுகொள்வதில்லை - ஷிப்லி பாரூக்

-எம்.ரீ. ஹைதர் அலி
தொடர்ச்சியாக ஒவ்வொறு நாளும் முஸ்லிம்களுடைய வர்த்தக நிலையங்கள் குறிவைத்து எரியூட்டப்படுகின்ற விடயமானது மிகவும் ஓர் கீழ்த்தரமான செயலாகும். எவ்வாறு இத்தீகள் பரவுகின்றன இதற்கு பின்னால் ஏதேனும் சதிகள் இருக்கின்றதா என்பதை இந்த அரசாங்கம் வெளிச்சத்திற்கு கொண்டு வராமல் ஏன் மறைக்கின்றது? என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கேல்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஒருசில நாட்களாக தொடர்ச்சியாக ஆங்காங்கே ஒவ்வோர் இடங்களிலும் முஸ்லிம்களுக்கென்று சொந்தமான கடைகள் எரிக்கப்படுகின்றமையானது நிச்சயமாக இதுவொரு திட்டமிடப்பட்ட சதியாகவே இருக்கும் என்பதில் எவ்விதமான சந்தேகமோ மாற்றுக்கருத்தோ கிடையாது.

இந்த விடயத்தில் உடனடியாக அரசாங்கம் தன்னுடைய முழுப்பலத்தினையும் பயன்படுத்தி தன்னுடைய கட்டுப்பாட்டிலே இருக்கின்ற புலனாய்வுத்துறைக்கு உச்சபட்ச அதிகாரங்களை வழங்கி இச்சதிகளுக்கு பின்னால் இருப்பவர்களை கண்டறிய வேண்டிய ஒரு தேவைப்பாடு இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு இருக்கின்றது என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், இவ்வாறு தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்குச் சொந்தமான பொருளாதாரங்களை குறிவைத்து சூறையாடப்பட்டு எரிக்கப்படுகின்ற சம்பவங்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இந்த நல்லாட்சி அரசாங்கமானது இவ்வாறு தொடர்ந்து கண் மூடிக்கொண்டு தன்னுடைய ஆட்சியினை நிறுவுவதற்கு பக்கபலமாக மிகப்பெரும் பங்காற்றிய முஸ்லிம் சமூகத்தினுடைய பொருளாதாரங்கள் திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுகின்றபோது கண்டும் காணாதது போன்று இருப்பதனை நாங்கள் மிக வண்மையாக கண்டிக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக இந்நாட்டினுடைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் இதில் நேரடியாக தலையிட வேண்டும். இதனை உடனடியாக அனைத்து முஸ்லிம் தரப்பினரும் அரசியல்வாதிகளுமாக இணைந்து ஒரு தீர்க்கமான முடிவினை எட்டப்பட வேண்டியதொரு தருனத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம்.

ஆகவே இவ்விடயத்தில் எதுவிதமான காலதாமதிப்புக்களோ இழுத்தடிப்புக்களோ ஏற்படுத்தாமல் உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பு அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகள் அதேபோன்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சிவில் அமைப்புக்கள், பொதுச் சிவில் அமைப்புக்கள் என அனைவரும் ஒன்றுபட்டு இந்த நாட்டிலே இனவாத சக்திகள் இவ்வாறான விடயங்களுக்கு பின்னால் இருந்துகொண்டு முஸ்லிம்களை குறிவைத்து அவர்களுடைய பொருளாதாரத்தினை திட்டமிட்டு அழிக்கின்ற இவ்வாறான விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஒற்றுமைப்பட்டு பாடுபடவேண்டிய ஒரு தேவைப்பாடும் அவசியமும் எமக்கு இருக்கின்றது என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், அதனூடாக இந்த நாட்டிலே கட்டியெழுப்பப்பட்டிருக்கின்ற சமாதானம் நிரந்தரமானதொரு சமாதானமாகவும் ஒரு சுபீட்சம் நிறைந்ததாகவும் நாடு நல்லதொரு முன்னேற்றப் பாதையினை நோக்கி பயணித்து அபிவிருத்தியடைந்த நாடாக மாறுவதற்குரிய வழிவகைகளை காண்பதற்கு இந்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எவ்விதமான பாரபட்சமுமில்லாமல் உடனடியாக இதற்கானதொரு தனியான விசாரணை ஆணைக்குழுவினை உருவாக்கி விசேடமாக மூவினத்தினையும் உள்ளடங்கியதான விஷேட பொலிஸ் பிரிவினை நிறுவுவதனூடாக இவ்வாறான சம்பவங்களுக்குப் பின்னால் இருக்கின்ற உன்மையினை ஆராய்ந்து அதற்குரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதனூடாக இவ்விடயத்தினை கட்டுப்படுத்த இந்த அரசாங்கம் முன்வர வேண்டும்.

இந்நாட்டினுடைய இறைமையையும் ஒற்றுமையையும் சீர் குலைத்தார்கள் என்ற அடிப்படையில் இச்சதிகளுக்குப் பின்னால் இருக்கின்றவர்களுக்கு அதிக பட்ச தண்டணைகளை வழங்குவதனூடாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்படுகின்ற இவ்வாறான அநீதிகளை ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டிய ஒரு தேவைப்பாடு இந்த அரசாங்கத்திற்கு இருக்கின்றது.

வெறுமெனே கண்டும் கானாதது போன்று இவ்விடயங்கள் விடப்பட்டுக்கொண்டு செல்லப்படுமாக இருந்தால் இந்த அரசாங்கத்திற்கு எதிராக முஸ்லிம்கள் வீதிகளில் இறங்கி ஜனநாயக ரீதியாக போராடுவதோடு மாத்திரமல்லாது சர்வதேசத்தின் கவனத்தினை ஈர்ப்பதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மற்றவர்களை குறை கூறி நம் ஒற்றுமையை நாமே இல்லாமல் செய்வதை விட்டுவிட்டு தங்களால் முடிந்த ஆக்கபூர்வமான விடயங்களை செய்வது இந்நாட்டு முஸ்லிம் சமுகத்திற்கு பயனுள்ளதாக அமையும்.

எனவே, முடியுமானவர்கள் ஜனநாயக ரீதியாக எமது எதிர்ப்புக்களையும் இந்நாட்டு முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள் ஆகியோருக்கு கொண்டு செல்ல தம்மாலான பங்களிப்புக்களை செய்ய முன்வருவோம். அது மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுடைய விடயத்தில் இந்த அரசாங்கம் பொடுபோக்காகவே இருக்கின்றது என்பதனையும் நாங்கள் உணர்ந்து கொள்கின்றோம் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.