சிறுவர்களை வேலைக்கமர்த்துபவர்களுக்கு கடும் நடவடிக்கை -தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

-எம்.சி.நஜிமுதீன்
சிறுவர்களை தொழிலாளர்களாக வேலைக்கமர்த்துபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக்கவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. அதனை அமுல்படுத்துவதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் அவ்வதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுவதைத் தடுப்பதற்கு அதிகாரசபை பல்வேறு வேலைத்திட்டங்களை முன்வைத்துள்ளது. எனவே சிறுவர்கள் பணிக்கமர்த்தப்படுவதை எவராவது அவதானித்தால் அதனை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவிக்கவும். 
அவ்வாறு முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் தொழில் திணைக்களம் மற்றும் பொலிஸாருடன் இணைந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி மரினி டி லிவேரா தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.