பெற்ற தாயை கத்தியால் குத்தி கொன்ற 13 வயது சிறுவன்

பிரான்சில் 13 வயது சிறுவன் பெற்ற தாயை கத்தியால் குத்தி இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tours புறநகர் பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. பெற்றோர்கள் விவாகரத்து பெற்ற நிலையில் சிறுவன் தாயுடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தின் போது உறவினர்கள் பல முறை போன் செய்தும் யாரும் எடுக்காமல் இருந்துள்ளனர். பின்னர், வேலையாட்கள் பல முறை வீட்டின் அழைப்பு மணி அடித்தும் கதவு திறக்கப்படவில்லை.
எனினும், வீட்டிற்குள் சிறுவன் இருப்பதை கண்ட வேலையாட்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், சிறுவனை சமாதானப்படுத்தி கதவை திறக்க வைத்துள்ளனர்.
உள்ளே சென்று பார்த்த போது தாய் சரமாரியாக குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். பொலிசார் நடத்திய விசாரணையில் சிறுவன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், பொலிசார் நடத்திய ஆய்வில் இணையத்தில் தனது தாயை கொல்ல விரும்புவதாக சிறுவன் தெரிவித்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது, காவலில் வைக்கப்பட்டுள்ள சிறுவனின் குற்றம் நிறுவப்பட்டால் சிறார் நீதிபதி முன் விசாரணை நடத்தப்பட்டு தண்டனை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.