விரும்பிய ஆடையணிந்து பாடசாலை வரலாம் - கல்வி அமைச்சர்

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கத்தால் சீருடைத்துணி வழங்கப்படும் வரை அவர்கள் தாம் விரும்பிய விரும்பிய ஆடையில் பாடசாலைக்கு சமுகமளிக்க முடியுமென கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நேற்று தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக சப்பாத்துக்கள் வழங்க முடியாதுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், அதற்காக கேள்விப்பத்திரம் கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
சிறிகொத்தவில் நேற்றுக் காலை நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சீருடைத் துணிகளை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இத்துணிகள் கிடைப்பதற்கு காலதாமதம் எடுக்கும் பட்சத்தில் எவ்வித தயக்கமுமின்றி வர்ண ஆடையில் மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்க முடியுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், நான்கு பொறியியலாளர்கள் தலைமையிலான குழுவினர் முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த பாடசாலைகளின் பாதுகாப்பு நிலைமைக்குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அதனடிப்படையில் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படக்கூடிய பாடசாலைகள் பற்றி இன்று (2) அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பின் பிரபல பாடசாலையொன்றுக்கு இரத்தினபுரி, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களில் இருந்து 18 பஸ் வண்டிகள் வருகின்றன.
சீரற்ற காலநிலைக் காரணமாக பாடசாலையின் கூரைகள் உடைந்து விழுவதனால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய உயிர் அச்சுறுத்தலுக்கு அமைச்சரும் அரசாங்கமுமே பொறுப்பேற்க நேரிடும்.அதனால்தான், பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கினோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.