கல்கிஸ்ஸயில் பிரபல விபச்சார விடுதி சுற்றிவளைப்பு

நீண்ட காலமாக இரகசியமாக நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
கல்கிஸ்சை வித்தியால மாவத்தையில் இரண்டு மாடி கட்டடத்தில் நடத்தி செல்லப்பட்ட இந்த விபச்சார விடுதிக்கு பாடசாலை மாணவர்கள், வர்த்தகர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் செல்வதாக தெரியவந்துள்ளது.
ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட இந்த விபச்சார விடுதியின் முகாமையாளர், ஊழியர்கள் மற்றும் 12 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
23 முதல் 39 வயதுடைய இந்த பெண்கள் அனுராதபுரம், பொலன்னறுவை, கித்துல்கல, தங்கல்லை, மொரட்டுவ, கந்தான ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
1300 ரூபாய் செலுத்தி சென்றதன் பின்னர் 6000 ரூபாய் வரையில் செலுத்தி பெண்களை பெற்று கொள்ளும் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு புலனாய்வு பிரிவு ஊடாக கிடைத்த தகவலுக்கமைய 1300 ரூபாய் பணம் செலுத்தி நபர் ஒருவரை அனுப்பி வைத்துள்ள நிலையில் இந்த விபச்சார விடுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.