கருப்பையுக்குள் கருத்தரங்கு - ஆசிரியர் கைது, மாணவி வைத்தியசாலையில்

கிளிநொச்சி கண்டாவளைக் கோட்டத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவியை கருத்தமர்வு எனக்கூறி அப்பாடசாலையில் கணிதபாடம் கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர் தனது மோட்டர் சைக்கிளில் ஏற்றிச் சென்றமையால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறித்த மாணவிக்கு மட்டும் செயலமர்வு உள்ளது என அழைத்து சென்றுள்ளார் எனவும் ஆசிரியருக்கு பலதடவைகள் தொடர்பை ஏற்படுத்திய பொழுதும் மாணவி கருத்தரங்கில் இருக்கின்றார்.
சிறிது நேரத்தில் எடுங்கள் எனக் கூறுகின்றாரே தவிர மாணவியை தொடர்பு கொள்ள முடியவில்லை என தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் மாணவியின் சகோதரனால் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனை அடுத்து சில மணிநேரத்துக்குள் மாணவியும் ஆசிரியரும் விஸ்வமடு பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
மாணவியை கிளிநொச்சி சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஆசிரியர் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளளார்.
இதேவேளை, இன்று எங்கும் கருத்தரங்குகள் நடைபெறவில்லை என முதலாம் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆசிரியரை ஆஜர்படுத்த இருப்பதாக தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.சத்துரங்க தெரிவித்துள்ளார்
பாடசாலைகளுக்கு மாணவர்களை ஆசிரியர்களை நம்பியே அனுப்புகின்றோம். இவ்வாறான வேலைகளை பார்க்கும் போது வேலியே பயிரை மேய்வதனைப் போல் உள்ளது.
இவ்வாறான குற்றங்கள் விடுதலைப்புலிகளின் காலத்தில் நடந்திருந்தால் இவ்வாறான ஆசிரியர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பதனை அனைவரும் அறிந்ததே.
எனவே இவர்களுக்கு தகுந்த சட்டநடவடிக்கைகளை எடுங்கள் இல்லை எனில் ஆசிரியரை எங்கள் கைகளில் தாருங்கள் நாங்கள் தீர்ப்பினை வழங்குகின்றோம் என தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் கொந்தளித்ததனைக் காணக்கூடியதாக இருந்தது என அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.