பளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்! சந்தேகத்தில் ஒருவர் கைது

பளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்றசந்தேகத்தின் பேரில் நபர்; ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த கிருபானந்தமூர்த்தி விஜயரூபன் (வயது 29)என்ற நபரே அவரது வீட்டில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரினால் நேற்று சனிக்கிழமை(03.06) கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் பளைப்பகுதியில் பொலிஸாரின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூட்டுசம்பவம் மேற்கொள்ளப்பட்டது.
சம்பவத்தினைத் தொடர்ந்து பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளைமேற்கொண்டிருந்ததுடன், அப்பகுதியில் இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமையில்ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் நேற்று சனிக்கிழமை இரவு குறித்த இளைஞரின் வீட்டிற்கு சென்று சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதுடன், விசாரணையின் பின்னர் நீதிமன்றில்ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.