ஜாமிஆ நளீமிய்யா உட்பட 7 பல்கலைக்கழகங்களில் நல்லிணக்க பாடத்திட்டம்

நாட்டிலுள்ள ஆறு பல்கலைக்கழகங்கள் மற்றும்பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் என்பவற்றில் முரண்பாடு மாற்றம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமை தாங்கும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் (ONUR), பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் (UGC) இணைந்து ´உயர் கல்வி ஊடாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம்´ எனும் திட்டத்தின் கீழ் 2018 முதல் பல்கலைக்கழகங்களில் நடைமுறைக்கு வரக்கூடிய வகையில் முரண்பாடு மாற்றம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது.
நாடு முழுவதுமிருந்து தெரிவு செய்யப்பட்ட 7 உயர்கல்வி நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் நாட்டின் அனைத்து சமூக அறிவியல் பீடாதிபதிகள் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளின் பங்குபற்றலுடன் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டது. 

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.