குழந்தைகளுக்கு இஸ்லாமிய பெயர்களை சூட்டக்கூடாது, 16 வயதிற்கு கீழுள்ளவர்களின் பெர்களை மாற்ற வேண்டும் - சீனாவில் அதிரடி உத்தரவு

சீனாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு இஸ்லாமிய பெயர்களை சூட்டுவதை தவிர்ப்பதுடன் 16 வயதிற்கு கீழ் உள்ளவர்களின் பெயர்களில் உள்ள இஸ்லாமிய வார்த்தைகளை நீக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மேற்கு சீனாவில் உள்ள Xinjiang என்ற மாகாண அரசு தான் இந்த உத்தரவை பிறபித்துள்ளது.
ரமலான் மாத மார்க்க நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில் அம்மாகாண அரசு அதிரடி உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ‘குடிமக்களின் குழந்தைகளுக்கு இஸ்லாமிய பெயர்களை சூட்டக்கூடாது. இஸ்லாமிய பெற்றோர்களும் இதனை பின்பற்ற வேண்டும்.
மேலும், 16 வயதிற்கு கீழுள்ள இஸ்லாமிய சிறுவர் மற்றும் சிறுமிகளின் பெயர்களில் இஸ்லாமிய வார்த்தைகள் இருந்தால் அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது.
இம்மாகாணத்தில் இஸ்லாமிய வார்த்தைகளான Islam, Quran, Mecca, Jihad, Imam, Saddam, Hajj, Medina, Arafat உள்ளிட்ட 15 வார்த்தைகள் ஏற்கனவே சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளது.
கம்யூனிச நாடான சீன அரசிற்கு தனது மாகாண ஆதரவினை தெரிவிப்பதற்காக அரசு இந்நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.