ஈரான் நாடாளுமன்றத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு , 3 பேர் காயம் - பிணைக்கைதிகளாக எம்.பி.க்கள் சிறைப்பிடிப்பு


ஈரான் நாடாளுமன்றத்தில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும் துப்பாக்கியுடன் நாடாளுமன்றத்தில் நுழைந்தவர்கள் எம்.பி.க்களை பிணைக்கைதிகளாக சிறைபிடித்தனர். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கொமேனி வழிபாட்டுத்தலத்தின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். 
Update News 
நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த ஆயுதம் தாங்கிய மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் எம்.பி.க்களை பிணைக்கைதிகளாக சிறைபிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பத்தை அடுத்து மர்ம நபர்களுக்கும் ஈரான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. தீவிரவாத இயக்கங்களுக்கு உதவும் கத்தார் நாட்டுடனான உறவுகளை துண்டிப்பதாக சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, பஹ்ரைன் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. 


இந்த விவகாரத்தில் சமாதான முயற்சிகளை குவைத் முன்னெடுத்து வருகிறது. இதனால் அரபு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரான் நாடாளுமன்றத்துக்குள் ஆயுதம் தாங்கிய மர்ம கும்பல் இன்று அதிரடியாக உள்ளே நுழைந்தது. துப்பாக்கி முனையில் எம்.பி.க்கள் சிலரையும் பிணைக்கைதிகளாக அந்த கும்பல் சிறை பிடித்தது. இதையடுத்து எம்.பி.க்களை மீட்க ஈரான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே தெஹ்ரானில் வழிபாட்டுத் தலம் ஒன்றிலும் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.