ஷைத்தானியர்களது காய்நகர்த்தல்கள் செவ்வனே நடந்தேறிக் கொண்டிருக்கின்றன


ஷைத்தானியர்களது காய்நகர்த்தல்கள் செவ்வனே நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.

.
குறித்து வைத்துக் கொள்ளுங்கள்..!!
.
அரபு தீபகற்பத்தைச் சுற்றி இன்று நடந்து கொண்டிருக்கும் அத்தனை ஃபித்னாக்களதும் இறுதி இலக்கு ஒன்று மட்டும் தான்....
.
பூகோளம் / அரசியல் / பொருளாதாரம் ஆகிய அனைத்து அடிப்படைகளிலும் அண்டை நாடுகளிலிருந்து சஊதியைத் தனிமைப் படுத்த வேண்டும்.
.
இது தான் இறுதி இலக்கு. ஏனையவை அனைத்தும் வெறும் கண் துடைப்புக்கள் மட்டுமே.
.
இதை விட வேறெந்தக் கத்தரிக்கா இலக்கும் அரபு தீபகற்பத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஷைத்தானிய சக்திகளின் தலைமை பீடங்களுக்கு இல்லை.
.
நான் சொல்வதில் சந்தேகமிருந்தால், ஒரு நிமிடம் நேரம் ஒதுக்கி, ஓர் உலக வரைபடத்தையெடுத்து, அரபு தீபகற்பத்தைச் சுற்றி என்ன நடக்கின்றதென்று பாருங்கள்; உண்மை புரியும்.
.
சஊதியின் கிழக்கு எல்லை முழுவதும்
ஷீயாக்களைக் கொண்டு நிரப்பப் படுகிறது;
.
சஊதியின் வடக்கு எல்லை முழுவதும்
யூத / குர்திஷ் ஆதிக்கத்தை நோக்கி நகர்கிறது;
.
சஊதியின் மேற்கு எல்லையில் ஏற்கனவே, சஊதிக்கு ஆபத்தில் துணைக்கு வர வாய்ப்பிருந்த ஒருசில நாடுகளும் கூட திட்டமிட்டு சிதைக்கப் படுகின்றன;
(எகிப்து, லிபியா, சூடான், துனீசியா, சோமாலியா...)
.
சஊதியின் தெற்கு எல்லையில் அண்மைக் காலமாக அவசர அவசரமாக யெமன் வாயிலாகப் புதிதாக இன்னொரு ஷீயா சக்தி (ஹூதி) உருவாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது.
.
நான்கு பக்கமும் சஊதியைச் சுற்றியே வியூகம் அமைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது.
.
இடையிலிருக்கும் ஐக்கிய அரபு அமீரகம், குவைத் போன்ற ஒருசில மிகச்சிறிய சக்திகளைத் தவிர சஊதிக்குத் துணையென்று சொல்ல வேறு யாருமே அங்கில்லை.
.
இந்த லட்சணத்தில் நிலைமை இருக்கும் போது, எமது உம்மத்திலும் ஒரு பகுதியினர் தமது பங்குக்கும் சேர்த்து சஊதியின் அழிவை எதிர்பார்த்து, ஏங்கிக் கொண்டிருக்கிறார்களே......
.
இவர்களை என்னவென்று சொல்ல?
இதில் ISIS காரர்களின் பங்களிப்பு மகத்தானது.
.
ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்:
.
இன்றைய உலக அரங்கில் எவனுமே நூற்றுக்கு நூறு நல்லவன் இல்லை; இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் யுகம் ஸஹாபாக்களின் யுகமும் இல்லை.
.
இந்த உம்மத்துக்கு ஏற்கனவே இருக்கும் பிரச்சினைகள் போதாதென்று, புதிதாக ஒரு பிரச்சினையை உருவாக்கியதையும், ஏனைய முஸ்லிம் நாடுகளிடமிருந்து நிலத்தைப் பறித்தெடுத்து, அதை இன்னொரு பக்கம் குர்திஷ் காரனுக்குத் தாரைவார்த்துக் கொடுத்ததையும் தவிர, வேறெந்த நல்லதையும் ISIS சாதித்து விடவில்லை.
.
என்னைப் பொருத்தவரை இந்த ISIS காரர்களை விட சஊதி அரேபியா எவ்வளவோ பரவாயில்லை.
.
- அபூ மலிக்

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.