தேள்களை முகத்தில் விட்டு கின்னஸ் சாதனை படைத்த பெண்

பாம்புக்கு அடுத்தபடியாக விஷம் கொண்ட தேள் கடித்தால் மனிதர்களுக்கு மரணம் நிச்சயம்.
இதனால் தேள் உயிரினத்தை கண்டாலே மக்கள் அஞ்சி ஓடுவார்கள், அப்படியிருக்கையில் தாய்லாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் தேள்களை தனது முகத்தில் உலாவ விட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இதனால் இவர் “தேள் ராணி” என அழைக்கப்படுகிறார். தாய்லாந்தை சேர்ந்த Kanchana Kaetkaew என்பவர், Ripley’s Believe it or Not museum சார்பில் நடத்தப்பட்ட கின்னஸ் போட்டியில் கலந்துகொண்டார்.
மேலும், Ripley’s Believe என்ற நிறுவனத்தின் தூதுவராகவும் பணியாற்றி வருகிறார். இவர் இதற்கு முன்னர் 3 நிமிடங்கள், 28 நொடிகள் டஜன் கணக்கில் கொடிய விஷம் கொண்ட தேள்களை தனது முகம், கழுத்து மற்றும் கைகளில் உலாவ விட்டு கின்னஸ் சாதனை படைத்தார்.
தற்போது இரண்டாவது முறையாக 50,000 தேள்களுடன் 12 மீற்றர் சதுர கண்ணாடி உறைக்குள் 33 நாட்கள் இருந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
மேலும் இவர் சாதனை செய்யும் போது தனது வாய்ப்பகுதியை தைரியமாக திறந்து வைத்துள்ளார், திறந்து வைத்துள்ள இவரது வாய்க்குள் தேள்கள் தங்களது கொடுக்குகளை நுழைத்து உலாவி திரிகின்றன.
ஆனால் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் மிகவும் தைரியமான முறையில் இந்த சாதனையை இவர் படைத்துள்ளார்.
தேள்களின் கண்பார்வை மிகவும் மங்கலானது, அது வாசனையை வைத்தே தனது உணவினை தேடிக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.