மருதானை முஸ்லிம் ஹோட்டலுக்கு தீ வைப்பு

கொழும்பு, மருதானை, மாளிகாகந்தை வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் உரிமையாளருக்கு சொந்தமான ஹோட்டலில் நள்ளிரவில் தீ பிடித்துள்ளது!

ஹோட்டலின் பின்பகுதியினால் ஏதேனும் தாக்குதல் மேற்கொள்ள பட்டிருக்கலாமென சந்தேகிக்கப் படுகிறது.

கடந்த 07 நாட்களாக குறித்த வர்த்தக நிலையம் மூடப்பட்டிருந்த நிலையில் வர்த்தக நிலையத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

இக்கடையினுள் கேஸ் சிலின்டர் வெடிப்போ மின்சார கசிவு ஏற்படவில்லை என்பது  ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

தாக்குதலுக்கு உள்ளான ஹோட்டலுக்கு அருகில் 12.30 மணியளவில் சந்தேகத்திற்கு இடமாக 03 இளைஞர்கள் நின்றமையும் இவ் வர்த்தக நிலையத்திற்கு அருகில் நடமாடியமையும் தெரியவந்துள்ளது.

ஹோட்டலில் பலத்த தீ வெளியானமையினால் சம்பவ இடத்திற்கு உடன் வருகை தந்த தீயணைப்பு படையினர் தீ யினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மருதானை பொலிசார் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது!

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.