நுகேகொட, மஹரகம பகுதிகளில் கடைகளுக்குத் தீ வைத்தநபர் கைது

நுகேகொட, மஹரகம பகுதிகளில் நான்கு கடைகளுக்குத் தீ வைத்தநபர் இன்று மாலை  பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தலவல்கள் தெரிவித்தன.

நேற்று முன்தினம் (04) விஜேராம சந்தியில் அமைந்திருந்த லெதர் மற்றும் கார்பட் பொருட்கள் விற்பனை நிலையத்துக்கு எரியூட்டிய நபரின் சிசிடிவி பதிவு பொலிசாரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில் அதனை நேரில் கண்ட சாட்சியொருவரும் முன் வந்திருந்தார்.

இந்நிலையில் குறித்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ள அதேவேளை குறித்த நபர் தொடர்பில் பொதுபல சேனாவின் முக்கியஸ்தர் ஒருவரிடம் தகவல் வினவப்பட்டுள்ளதாக கொழும்பு முக்கியஸ்தர் ஒருவர் மடவளை நியுஸுக்கு குறிப்பிட்டார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.