இரத்த வங்கியின் முன்னாள் பணிப்பாளருக்கு எதிராக பிடியாணை

இரத்த வங்கியின் முன்னாள் பணிப்பாளர் மங்கலிகா பிங்துசாரவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
காலாவதியான குருதி பிளாஸ்மாக்களை நாட்டுக்கு கொண்டு வந்து நோயாளர்களின் பாவனைக்கு வழங்க இடமளித்தமை மூலம் அரசாங்கத்திற்கு நஸ்டத்தை ஏற்படுத்தியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று (06) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
எனினும், சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவரது சார்பில் ஆஜரான சட்டத்தரணி, மங்கலிகா சுகயீனம் காரணமாக அவுஸ்திரேலியாவில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டார்.
விடயங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதம நீதவான் லால் ரணசிங்க பண்டார சந்தேகநபரைக் கைதுசெய்ய பிடியாணை பிறப்பித்ததோடு, அவருக்கு பிணை வழங்க கையெழுத்திட்டவர்களை ஆகஸ்ட் 9ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக எமது செய்திளாயர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.